Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபணம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு கோரிக்கை.. வழக்கறிஞர் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகளாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 9 பேர் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, அவர்களை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

Pollachi Sexual Assault Case We have requested a single request behalf of the suffered Girls in the Case says CBI Lawyer

இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2016ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற சம்பவங்களில் அந்த கும்பல் ஈடுபட்டு வந்ததாக தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் திமுக தரப்பில் முக்கிய விவாதமாக வழக்கு மாற்றப்பட, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே வழக்கம் சிபிஐ கைகளுக்கு சென்றது. தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சிபிஐ விரிவான விசாரணையை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் லேப்டாப்களில் ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது.

சுமார் 6 ஆண்டு கால விசாரணைக்கு பின், கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், 9 எதிரிகளும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் திருமணமாகாதவர்கள், வயதான பெற்றோர் உள்ளிட்ட காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை பொறுத்தவரை 376டி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் 376 (2)என் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய முக்கிய குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் அரசு தரப்பில் உயர்ந்தபட்ச தண்டனையாக சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகள். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம்.

குற்றவாளிகள் தரப்பில் குடும்பத்திற்கு ஒரே மகன், வயதான பெற்றோர் போன்றவை மட்டுமே கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதல் போலீஸ் தரப்பிலும், பின்னர் சிபிசிஐடி தரப்பில், அதனைத் தொடர்ந்து சிபிஐ தரப்பிலும் விசாரணை செய்யப்பட்டது. சிபிஐக்கு வந்த பின், எந்த பெண்களும் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் குற்றவாளிகளிடம் இருந்த கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்தது.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, பின்னர் விசாரணை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனதளவில் தைரியம் கொடுத்து சாட்சியம் கொடுக்க வைத்துள்ளனர். மொத்தமாக 48 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு சாட்சி கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி, சுதந்திரமாக சாட்சி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 9 குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் வகையில், மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+