நானும் ஒரு பெண்ணை பெத்தவன்தான்...பொள்ளாச்சி விவகாரத்தால் மனசு வலிக்குது.. ஸ்டாலின்
கோவை: நானும் ஒரு பெண்ணை பெற்றவன் என்பதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக முக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
பொள்ளாச்சி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வீதி வீதியாக திறந்த வேனில் ஏறி நின்றபடி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்துக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின் பேசியதாவது: "திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற காரணத்தினாலேயே உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை.

ஊழலில் நம்பர் ஒன்
ஊருக்கு நல்ல பேரு வாங்கி கொடுக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறோம். நாட்டுக்கு நல்ல பேர் வாங்கி கொடுக்கக்கூடிய அமைச்சர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஊழலில் நம்பர் என்ற பெயரை வாங்கி கொடுத்த அமைச்சர் எஸ்பி வேலுமணி தான். என்ன பேசுகிறோம் என்பது அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஊழல் பட்டியலில் அவர் தான் நம்பர் ஒன்.

வேலுமணி டாப்
ஊழல் செய்வதில், லஞ்சம் வாங்குவதில், கொள்ளை அடிப்பதில் முதல்வர் எடப்பாடியையே அமைச்சர் எஸ்பி வேலுமணி, தூக்கி சாப்பிட்டுவிட்டார். இந்த பகுதியைச் சேர்ந்த அவர் என்னென்ன சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

தண்டிப்போம்
டெண்டர் எல்லாம் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவருடைய பினாமிகளுக்கும்தான் கொடுக்கப்படுகிறது. ஊழல் பணத்தை குவித்து வைத்துக்கொண்டு முதல்வரையே மிரட்டி கொண்டு இருக்கிறார். எனவே இந்த ஆட்சி நிலைத்து நிற்காது. விரைவில் கவிழப்போகிறது. எனவே திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த ஆட்சியில் யார், யார் என்ன ஊழல் செய்தார்கள் என்பதை முதல் வேலையாக கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள்.

சிபிசிஐடி விசாரணை
பொள்ளாச்சி வழக்கை அமைச்சர்களுக்கு சாதகமாகவும், ஆட்சிக்கு சாதகமாகவும் சிபிசிஐடி விசாரித்துக் கொண்டு வருகிறது. இன்னும் சிபிஐ விசாரணை தொடங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடனே சிபிஐயை வைத்து பொள்ளாச்சி வழக்கை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு கூறினார்.

ஆளும் கட்சி பணம்
இதையடுத்து கோவை குனியமுத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பேசியதாவது; ஆளும் அதிமுகவின் பணம் ஆம்புலன்ஸ், மற்றும் போலீஸ் வாகனங்களில் கொண்டுசெல்லப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுகவே அதை செய்யும்.

நானும் பெண்ணை பெற்றவன்
பொள்ளாச்சி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்த போது மனம் உடைந்து வந்துள்ளேன். ஒரு பெண்ணா, இரண்டு பெண்ணா, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். நானும் ஒரு பெண்ணுக்கு அப்பாதான். இங்கு இருக்கக்கூடிய அத்தனைபேரும் பெண்களை பெற்றவர்கள் தான்.

கண்டுகொள்ளவில்லை
7 வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் கொடுமையை, போலீசுக்கு தெரிந்தே விட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் மாமுல் செல்கிறது. போலீசில் இருக்கும் அதிகாரிகள் பல பேர் மாற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தவறு செய்யததாலேயே மாற்றப்பட்டுள்ளார்கள். இந்த பொள்ளாச்சி விவகாரத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன்" இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications