வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
கோவை: தமிழ்நாடு முழுவதும் நேற்று லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க வந்த நபர் எனக்கு வலது கை விரலில் தான் மை வைக்க வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரித்ததில் அந்த நபர் ஏற்கனவே ஓட்டளித்துவிட்டது தெரியவந்தது.
தமிழகத்தில் நேற்று லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்றது. லோக்சபா தேர்தலில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கம் போல வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு மற்றும் சின்ன சின்ன சலசலப்புகளை தாண்டி பெரிய அளவில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சில இடங்களில் விதிகளை மீறி வாக்களிக்க முயன்ற சில நபர்களையும் வாக்குச்சாவடி அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.
இரண்டு முறை வாக்களிக்க முயற்சி: அந்த வகையில், கோவை நல்லம்பாளையளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் ஏற்கனவே வாக்களித்து விட்டு மீண்டும் மற்றொரு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கோவை நல்லம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் திருநாவுக்கரசு எனபவர் வசித்து வருகிறார்.
வலது கை விரலில் தான்: 52 வயதான இவர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது வாக்களிக்க விரலில் மை வைப்பதற்காக ஆள்காட்டி விரலை காட்டுமாறு வாக்குச்சாவடியில் இருந்த ஊழியர் கூறினார். இடது கை விரலை காட்டுவதற்கு பதிலாக வலது கை விரலை காட்டினார்.
அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்களிடம் வாக்குவாதம் செய்த திருநாவுக்கரசு , வலது கையில் விரலில் தான் மை வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால், வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து இடது கை விரலை பார்த்த போது ஏற்கனவே ஓட்டுபோட்டதற்காக மை வைக்கப்பட்டு இருந்தது.
கைது செய்த போலீஸ்: இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர். அவர் மீது போலியான பெயரில் வாக்களித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஒரே நபருக்கு இரண்டு இடங்களில்: அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருநாவுக்கரசுக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், இதனால், காந்திபுரம் பகுதியில் வாக்களித்துவிட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளதாக கூறினார்.
பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருந்ததும் அவர் இரண்டு இடங்களில் வாக்களிக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications