கோவை மக்களே கவனம்.. இன்று எங்கெல்லாம் 'பவர்கட்' தெரியுமா?.. முழு விவரம்
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் பெரியநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவையில் செப்டம்பர் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. மாலை 5 மணிக்கு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவஇந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாப், சித்தாபுதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை பகுதி, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதி, பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் சுற்றுப்பகுதிகள், காந்திமா நகர் (ஒரு பகுதி).
மாதம்பட்டி துணை மின் நிலையம்: மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications