கோவையில் குறிச்சி முதல் கிணத்துக்கடவு வரை.. இன்று எங்கெல்லாம் "மின்தடை".. நோட் பண்ணுங்க
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவம்பர் 21) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டேன்ஜெட்கோ சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்தடை ஏற்படவுள்ளது. கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

குறிச்சி (சிட்கோ) துணை மின் நிலையம்: சிட்கோ, சுந்தராபுரம் (ஒரு பகுதி), போத்தனூர் (ஒரு பகுதி), எல்.ஐ.சி. காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கிணத்துக்கடவு துணை மின் நிலையம்: சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (ஒரு பகுதி), மண்றாம்பாளையம், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (நவம்பர் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்று (நவம்பர் 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், PN புதூர், வடவள்ளி, மருதமலை கஸ்தூரி நாயக்கன்பாளையம், இடையார்பாளையம் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம் வீரகேரளம் ஒரு பகுதி, அதை ஒட்டி உள்ள சில பகுதிகளில் மின்தடைபட உள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications