கோவையில் நாளை "பவர்கட்".. போத்தனூர் முதல் கீரணத்தம் வரை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (நவம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டேன்ஜெட்கோ சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை சில இடங்களில் மின் வாரியம் சார்பில் நவம்பர் 20 (புதன்கிழமை) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் போத்தனூர், நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீ ராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜே.ஜே.நகர், அன்னபுரம், அவ்வை நகர், முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
அதேபோல, கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது
மேற்கண்ட பகுதிகளில் நவம்பர் 20 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டியே பணிகளை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications