''செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரும்''! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திடீர் ஆவேசம்!
கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடும் என எச்சரித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
டாஸ்மாக் விவகாரத்தில் மதுபான கொள்முதல் முதல் காலிபாட்டில் வரை ஊழல் செய்துகொண்டு எதுவுமே நடக்காதது போல் செந்தில்பாலாஜி இருந்து வருவதாகவும் அவரை முதல்வர் பதவி நீக்க வேண்டும் எனவும் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 22 மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் கரூர் பார்ட்டிகள் வசூல் செய்து அட்டூழியம் புரிவதாகவும் அண்ணன் அனுப்பிவிட்டார் எனக் கூறி செந்தில்பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அவர்கள் வசூல் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். இதேபோல் சட்டவிரோத மதுபான பார்கள் மூலமும் அமைச்சர் செந்தில்பாலாஜி வருவாய் பார்ப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை கொண்டு செல்லும் வாகனங்களின் வாடகை தொகை மாற்றப்பட்டதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னிச்சையாக முடிவெடுத்து கிலோமீட்டருக்கு 8 ரூபாய் என்றிருந்ததை 15 ரூபாயாக மாற்றியதாக குற்றஞ்சாட்டினார்.
இதனால் தான் அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என தாம் கூறுவதாகவும் ஆளுநரிடமும் இது குறித்து ஆதாரபூர்வமாக தாம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். மின் துறையில் நிகழ்ந்துள்ள ஊழல் காரணமாகவே மின் கட்டண உயர்வை கொண்டுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கிக் கொண்டே சென்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications