வெளுத்துக் கட்டும் மழை.. கோவைக்கு ரெட் அலர்ட்.. முன்னெச்சரிக்கை பணிகள் என்ன? - அமைச்சர் முத்துசாமி
கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருப்பதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவ மழை கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மே 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை (24-05-2025) 05.30 மணியளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது.

இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, கோவை நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருப்பதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், அவிநாசி மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் ஆகிய பகுதியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். கோவையில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மழை பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழை நீர் சாலைகளில் தேங்குவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் முழுவதும் அருமையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ளும் அளவிற்கு நம்முடைய அதிகாரிகள் வேலை செய்து இருக்கின்றனர். முதல்வர் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசி கொண்டிருக்கின்றார். மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வால்பாறையில் ஆர்.டி.ஓ. ஒருவர் பணியமர்த்தப்பட்டு முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். குப்பைகளை சாக்கடையில் போடாமல இருந்தால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும், மக்கள் இதைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications