கரூர் தொகுதியில்தான் போட்டி.. கோவைக்கு செல்ல வாய்ப்பே இல்லை.. உறுதி செய்த செந்தில் பாலாஜி!
கோவை: சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான சூழலில், அதனை அவர் மறுத்துள்ளார். இந்த முறையும் கரூர் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் கரூர் மக்கள் தன்னை வெற்றி பெற வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் இருந்து மாறப் போவதாக தகவல் வெளியாகியது. கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமனம் செய்திருப்பதால், அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. கடந்த முறை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்ஆர் விஜயபாஸ்கரை வீழ்த்தி இருந்தார் செந்தில் பாலாஜி.

இதனால் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவது ரிஸ்க் என்பதால், செந்தில் பாலாஜி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொகுதி மாற்றம் தொடர்பான அத்தனை தகவல்களுக்கும் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கோவையில் நான் போட்டியிட போவதாக சோசியல் மீடியாவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் நான் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் தொகுதி மக்கள் என்னை அன்பாகவும், பாசமாகவும் வைத்துள்ளனர்.
தொடர்ந்து நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த தொகுதி எனக்கு நன்றாகவே இருக்கிறது. அதனால் கோவையில் போட்டியிடுவேனா என்ற சந்தேகங்கள் வேண்டாம். அதேபோல் வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளனரா, போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்று வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு மேற்கொள்ள கூறியுள்ளோம்.
இந்த பணிகள் முடிவடைந்த பின் ஆட்சேபணைகள் இருந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவோம். அதேபோல் திமுகவின் கள்ள ஓட்டு தடுக்கப்பட்டதாக பாஜக, அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் இப்போது நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது கள்ள ஓட்டுகள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?
அதேபோல் தமிழ்நாட்டில் எந்த கட்சியாக இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்யாமல் அவர்களால் அரசியலில் இருக்க முடியாது. லோக்சபா தேர்தலின் போது கோவை ஒருவர் போட்டியிட்டார். வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பாகவே அவர் வெற்றி பெற்றுவிட்டது போல் சில செய்திகள் வெளியாகின. தற்போதும் அப்படியான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறீர்கள். அவர் வீட்டில் இருந்து புறப்படும் போதே லைவ் போடுகிறீர்கள். ஆனால் முதல்வர் யார் என்பதை ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது. மக்களே தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications