கோவையில் தேர்தல் ரிசல்டுக்கு முன்பே கறி விருந்து வைத்த செந்தில் பாலாஜி.. விஷயம் டாப் சீக்ரெட்!
கோவை: சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்தது கோவை மாவட்டம் தான். திமுக வெற்றிக்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜி கோவைக்கு வந்துள்ளார். கோவை தெற்கு தொகுதி நிலவரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அங்கு தேர்தலை நிறுத்த கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் கோவை திமுக நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி கமகம கறி விருந்து பரிமாறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் தான் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் கோவை தேர்தல் களம் கொதிகொதித்து கொண்டிருக்கிறது.

கோவை தெற்கு தொகுதி
திமுக செந்தில் பாலாஜி, அதிமுக வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கினார்கள். சராசரியாக ஒரு வாக்குக்கு ரூ.5,000 திமுக பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தனர்.
கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்
உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளிலும் கோவை களம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தேர்தலில் வாக்களிப்பதற்காக செந்தில் பாலாஜி கரூர் கூட செல்லாமல் கோவையில் தான் இருந்தார். அந்தளவுக்கு உச்சகட்ட பரபரப்பு நிலவி வந்தது.
ரேஸ்கோர்ஸில் வீடு
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாகவே கோவையில் செந்தில் பாலாஜி குடியேறியுள்ளார்.
தேர்தல் முடிந்த நிலையில் தன்னுடைய வீட்டில் செந்தில் பாலாஜி திமுகவினருக்கு நேற்று கறி விருந்து வைத்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கோவையில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கறி விருந்து
கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளிலும் செந்தில் பாலாஜி நடந்து சென்று தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தவர், ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித்தனியாக அழைத்து வாக்குப்பதிவு நிலவரம், சாதக, பாதகங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, சில்லி சிக்கன், மட்டன் ஃப்ரை, வெள்ளை சாதம், ரசம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உள்கட்சி பூசல், பட்டுவாடாவில் கை வரிசை காட்டிய திமுக நிர்வாகிகளை செந்தில் பாலாஜி கடிந்து கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications