SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே
கோவை: சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பு அண்ணன் தம்பியாக இருந்த எடப்பாடி பழனிசாமியும், வேலுமணிக்கும் பனிப்போர் நிலவுகிறது. எடப்பாடி, வேலுமணி அணிகள் இணைந்துவிட்டன. ஆனாலும் பிரச்சனைகள் தீரவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் தொடங்கிய பிரச்சனை கோவை விமான நிலையம் வரை சென்றுள்ளது. இதில் வேலுமணி மிகவும் அப்செட்டாக சென்றுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

துக்க வீட்டில் பிரச்சனை
கடைசியில் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடியுடன் இணைந்துள்ளனர். சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே எடப்பாடியுடன் இணையாமல் தங்களின் நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளனர். தனக்கு எதிராக களமாடியதால் வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். எடப்பாடியிடம் சரண்டராகியும் நீக்கப்பட்ட பதவிகளை கொடுக்கவில்லை.
இதனால் வேலுமணி மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சி வந்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் அம்மாவின் மறைவுக்காக அவர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். அப்போது வேலுமணியும் ஜெயராமன் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள் வேலுமணியை துரோகி கோஷமிட்டனர்.
எதிரும் புதிருமான துருவங்கள்
வேலுமணி அதிர்ச்சியாகி நிற்க ஜெயராமன் உள்ளிட்டவர்கள் சத்தம் போட்டு கண்டித்தனர். இந்த சம்பவத்தின்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், வேலுமணி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. துக்க வீட்டில் மோதல் வெடித்து பரபரப்பானது. மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் வேலுமணி மிகவும் அப்செட்டாகிவிட்டாராம்.
எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் இருந்து பிறகு கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டார். எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கோவை வரும்போதும், கோவையில் இருந்து சென்னை புறப்படும்போதும் வேலுமணி தவறாமல் செல்வார். வரவேற்கவும், வழியனுப்பவும் வேலுமணி முதல் ஆளாக நிற்பது வழக்கம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்களுக்குள் பகை அதிகமாகியுள்ளது. இதில் இருவருமே கோபத்தில் உள்ளனர்.
வேலுமணி புறக்கணிப்பு
இதனால் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை வழியப்புவதற்காக வேலுமணி கோவை விமான நிலையம் செல்லவில்லை. அவருக்கு பதிலாக புதிதாக அதிமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செ.ம வேலுசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தான் விமான நிலையம் சென்று எடப்பாடி பழனிசாமியை வழியனுப்பினார்கள். இதனால் அணிகள் இணைந்தும் மனங்கள் இணையாத நிலை அதிமுகவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications