மனைவிக்கு வளைகாப்பு; சற்று நேரத்தில் கணவர் மரணம் ! நடந்தது என்ன?
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலியானார்கள். இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே சக்திவேல் என்பவர் தன்னுடைய நிறைமாத கர்ப்பிணியான பிரியங்காவை புங்கம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து தன்னுடைய வீடு இருக்கும் கணுவாய்ப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மதுபானம் அருந்திவிட்டு பயணம்
அப்போது வழியில் லிப்ட் கேட்ட முதியவர் மனோகரன் என்பவரையும் தனது வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அச்சமயம் செல்லும் வழியில் சக்திவேல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் குருந்தமலை என்ற பகுதிக்கு செல்லும்போது திடீரென எதிரே வந்த போர்டு கார் ஒன்று சக்திவேல் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. விபத்து நடந்ததால் பயந்து போன ஓட்டுநர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

2 பேர் பலி
கார் அதிவேகமாக மோதியதால் சக்திவேலும், மனோகரனும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சக்திவேலின் உயிர் பிரிந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மேட்டுப்பாளையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவருக்கு வலை
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காரமடை போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியது தனியார் கல்லூரி மாணவர் ஜீவானந்தம் என்று தெரியவந்துள்ளது. தற்போது பாயப்பனூரை சேர்ந்த ஜீவானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தையை பார்க்காமலேயே மரணம்
எனினும் விபத்து நடந்ததற்கு காரணம் கார் மட்டும்தானா அல்லது குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் சக்திவேல் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சக்திவேல் பிறக்கப்போகும் தன்னுடைய குழந்தையின் முகத்தைக் கூட பாராமல் அகால மரணம் அடைந்திருப்பது பிரியங்கா மற்றும் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications