திடீர்னு பாய்ந்த வெள்ளம்.. 3 பேர் சிக்கி கொண்டதால் பரபரப்பு.. பவானி ஆற்றில் மூழ்கி தாய் - மகள் பலி
பவானி ஆற்று வெள்ளத்தில் 2 பேர் மூழ்கி பலியானார்கள்
கோவை: பவானி ஆற்றில் வெள்ளம் திடீரென வந்ததால், நீரில் 3 பேர் சிக்கி கொண்டனர்.. இதையடுத்து நடந்த துரித மீட்பு பணியில் தாய், மகள் இருவரும் பலியான நிலையில், ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது... மின்சாரம் தயாரிப்பதற்காக இங்கிருந்து தினமும் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
அந்த தண்ணீரானது மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக செல்லும் பவானி ஆறு மூலம் பவானிசாகர் அணைக்கு சென்றடைகிறது... திடீரென்று ஆற்றில் தண்ணீர் அடிக்கடி திறக்கப்படுவதால், வெள்ளமும் கரை புரண்டு ஓடுவது இயல்பு.

2 பேர் பலி
அதனால்தான், இந்த ஆற்றில் குளிக்க செல்பவர்கள் அடிக்கடி வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் துயரமும் நடக்கிறது.. அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சங்குபதி.. 50 வயதாகிறது.. இவரது மகள் கவிதா 30 வயதாகிறது.. பேத்தி சாதனா 13 வயதாகிறது.. இவர்கள் 3 பேரும் நேற்று பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார்கள்.. 3 பேரும் உப்புப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றுக்குள் இறங்கி ஒரு மண் திட்டில் உட்கார்ந்து துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தனர்.

திடீர் வெள்ளம்
அப்போதுதான், பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது பாய்ந்து வந்தது... இதை பார்த்து உடனே அங்கிருந்தவர்கள், "வெள்ளம் வருது.. வெள்ளம் வருது" என்று அலறி கூச்சலிட்டனர்.. ஆனால் நீர் சத்தத்தில் அவர்கள் கத்தியது இவர்களுக்கு கேட்கவில்லை... வெள்ள நீர் அருவில் பாய்ந்து வந்த பிறகுதான் அதை பார்த்து 3 பேருமே அதிர்ச்சி ஆனார்கள்.. பிறகு, சுதாரித்து கொண்டு கரையை நோக்கி ஓடி வர முயற்சி செய்தனர்... ஆனால், அதற்குள் வெள்ளம் அவர்கள் 3 பேரையுமே இழுத்து சென்றுவிட்டது.

வெள்ளம்
இதனால், அங்கிருந்தோர் ஆற்றுக்குள் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர்... எவ்வளோ தேடியும் தாயும் மகளும் கிடைக்கவில்லை... சாதனாவை மட்டும்தான் உயிருடன் மீட்க முடிந்தது... வெள்ளம் வந்த வேகத்திலேயே அவர்கள் பேரையும் அடித்து கொண்டு போய்விட்டிருந்தது.. இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்..

போஸ்ட் மார்ட்டம்
ஆனால் அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டிருந்தனர்.. ஒரு மணி நேர கடின போராட்டத்துக்கு பிறகு சங்குபதி, கவிதாவின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டத்துக்காக அந்த உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட ரித்திகாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications