Swine Flu: கோவைக்கு வந்த அடுத்த சிக்கல்.. பன்றி காய்ச்சல் நுழைந்தது எப்படி?.. 2 பேருக்கு அறிகுறி..!
கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்கிறது
கோவை: கோவையில் 2 பேருக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு, காய்ச்சல் போன்றவைகள் 2 பேருக்கு இருந்ததையடுத்து அவைகள் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் மற்றும் ஆர்எஸ்புரத்தை சேர்ந்த 63 வயது பெண் ஆகியோருக்குதான் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது..
இதையடுத்து, அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு, கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.. இது தொடர்பாக அதிகாரிகள் சொல்லும்போது:

தீபாவளி
"கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கிறது.. அதனால், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.. இன்னொருவருக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.. விசாரித்து வருகிறோம்.. இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெஸ்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

நெறிமுறைகள்
யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அவசியம் என்றால் மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொது வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தியுள்ளோம்.. அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய 2 வைரஸ் பரவலுக்கும் ஒரே மாதிரியான தடுப்பு பணிகள், டெஸ்ட் முறைகளே பின்பற்றப்படுகின்றன..

அறிகுறிகள்
சளி, இருமல், தொண்டை வலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்து மாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்" என்றனர். கோவையில் 2 நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது..

பரிசோதனை
அதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 44 வயது நபருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது வீடு தனிமைபடுத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குக் காய்ச்சல் அதிகமாக இருந்தால், உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்..

அறிவுறுத்தல்
அதேபோல, வீட்டின் முன்புறம் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலால் தற்போதைக்கு தமிழகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.இப்போதுதான் தொற்று பாதிப்பில் இருந்து கோவை மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், பன்றிக்காய்ச்சல் பரவல் பீதியை தந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications