"வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு பாஜக அண்ணாமலை வேட்புமனுவில் பிழை இருந்த போதும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சர்ச்சை கிளப்பி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

Tamilandu BJP Chief Annamalai explains about his nomination controversy

கோவை லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அங்கே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.

அண்ணாமலை: அண்ணாமலை வேட்புமனு தவறாக இருந்த போதும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக அதிமுக, நாதக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. அதாவது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதிமன்ற முத்திரைத் தாளைப் பயன்படுத்தினார் என்பதே புகாராகும்.

இந்த விவகாரம் பெரிதான நிலையில், இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் விளக்கமளித்தது. அதாவது அண்ணாமலை இரண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததாகவும். அதில் தவறான வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் சரியான மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இதை அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கவில்லை. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

விளக்கம்: இது குறித்து அவர் கூறுகையில், "அரசியல் கட்சிகள் நேரடியாகக் களத்தில் எதிர்க்க முடியாமல் வழக்கமான டிராமாவை வேட்புமனுவில் கொண்டு வந்துள்ளனர். நான் இரண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து இருந்தேன். ஒன்று கோர்ட் பீஸ் பேப்பரிலும் மற்றொரு வேட்புமனு Indian non judicial தாக்கல் செய்தோம். ஏனென்றால் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குழப்பம் இருந்தது. வழக்கறிஞர்கள் இரு வேறு விதமாகக் கூறியதாகச் சொன்னதால் குழப்பம் இருந்தது.

அதைத் தொடர்ந்தே தேர்தல் அதிகாரி ஆராய்ந்து வேட்புமனுவை ஏற்றுக் கொண்டார் இது பெரிய விஷயம் இல்லை.. ஆனால், களத்தில் எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை மட்டுமே காட்டுகிறது. இது எல்லா முறையும் நடப்பது தான். ஆனால், இந்த முறை அதை உச்சபட்சமாக எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே தேர்தல் அதிகாரியே தலையிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

இரண்டு வேட்புமனு: சீரியல் நம்பர் 15, சீரியல் நம்பர் 27 என இரண்டும் என் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டது தான். எப்போதும் முக்கிய கட்சிகள் இரண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வைத்துக் கொள்வார்கள். இரண்டாவது வேட்புமனுவை வேட்பாளர் நேரடியாகத் தாக்கல் செய்ய வேண்டிய அதிகாரி இல்லை.

எப்போது அப்லோட் செய்யப்பட்டது என்பதை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்க வேண்டும். பொய்யான தாக்கல் சொல்லி வேட்புமனுவை நிராகரிக்கச் சொல்கிறார்கள். சும்மா காரணம் சொல்லி வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது ஒன்றும் போட்டி தேர்வு இல்லை காரணத்தைச் சொல்லி நிராகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது. எதாவது கையெழுத்து மிஸ் ஆனால் கூட போடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+