கொஞ்சம் அங்க பாரு கண்ணா.. கோவையின் அடையாளமே மாறுது.. 650 கோடியில் பிரம்மாண்ட தீம் பார்க்
கோவை: இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடையும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் கோவை முதன்மையான மாவட்டமாக உள்ளது. கோவையில் கடந்த வருடம் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. விரைவில் பெரியார் நூலகம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் ரூ.650 கோடி மதிப்பில் பிரபல நிறுவனம் கோவையில் பிரம்மாண்ட தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தீம் பார்க்காக இது அமையவுள்ளவுள்ளது. இதன் மூலம் கோவை புதிய அடையாளத்தை பெறவுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயரெடுத்த கோவை தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக வளரும் நகரமாக உள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம், ஐடி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. ஆனால் கோவையின் உள்கட்டமைப்பே மேம்படுத்தும் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கோவை பொழுதுபோக்கு
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முக்கியமாக கோவை மாநகரின் மக்கள் தொகை மட்டுமே 30 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி மற்ற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். மேலும் வெளியூர்களில் இருந்து கோவைக்கு பலர் குடியேறி வருகிறார்கள்.
ஆனால் கோவைக்கான பொழுது போக்கு அமசங்கள் மிகவும் குறைவாக உள்ளது. கோவையின் முக்கிய பொழுது போக்கு பகுதியாக இருந்த வஉசி உயிரியல் பூங்கா கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், 3 தீம் பார்க்குகள் மட்டுமே பொழுது போக்கு அம்சங்களாக உள்ளன. சமீபத்தில் காந்திபுரம் பகுதியில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரம்மாண்ட தீம் பார்க்
கோவையின் மையப் பகுதியில் அமைந்திருப்பதாலும், வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததாலும் அங்கு அதிகளவு மக்கள் செல்கிறார்கள். வீக் எண்ட் மற்றும் விடுமுறை நாட்களில் சராசரியாக 30,000 மக்கள் செம்மொழி பூங்காவிற்கு செல்கிறார்கள். இந்நிலையில் கோவையின் அடையாளத்தையே மாற்றும் வகையில் பிரம்மாண்ட தீம் பார்க் ஒன்று கோவையில் அமைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி அம்யூஸ்மென்ட் பார்க் நிறுவனமான இமேஜிகா வேர்ல்ட் (IMAGICAA WORLD) ரூ.650 கோடி மதிப்பில் கோவையில் பிரம்மாண்ட தீம் பார்க் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்., தமிழ்நாடு சுற்றுலாத்துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தமிழக அரசு சமீபத்தில் பல்வேறு நிறவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
புதிய அடையாளம்
சுற்றுலா உச்சி மாநாட்டில் தமிழ்நாடு அரசு, இமேஜிகா நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நீலகிரி, பொள்ளாச்சி, வால்பாறை, கேரளா உள்ளிட்ட பகுதிகளின் மையமாக கோவை உள்ளது. சுற்றுலாவிற்கு அதிக ஸ்கோப் இருக்கும் பகுதி கோவை. அந்த வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள். தற்போது மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பிளாக் தாண்டர் தான் மாவட்டத்தின் பெரிய தீம் பார்க்காக உள்ளது.
எதிர்காலத்தில் கோவை மேலும் வளர்ச்சியடையும் என்பதை கணக்கிட்டு தான் இமேஜிகா நிறுவனம், கோவையில் பிரம்மாண்ட தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. இடம் தேர்வு செய்து விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் கோவையின் அடையாளமே மாறுவதுடன், சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications