தைப்பூச திருநாள்: மருதமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கோவை மக்களே நோட் பண்ணுங்க
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் இந்த கோயில், மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கோவை மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வருவது வழக்கம்.

குறிப்பாக கேரள மாநில மக்கள் பழனிக்கு அடுத்தபடியாக எந்தவொரு நல்ல காரியங்களானாலும் மருதமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர். முருக பக்தர்களுக்குப் பிடித்த கோயில்களில் டாப் 10 பட்டியலில் மருதமலை கட்டாயம் இடம்பிடித்திருக்கும். மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
முருகனுக்கு உகந்த தினமான தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மருதமலை கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மருதமலை கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மலைப் பாதையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் திரளான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 4 தேதி முதல் 8 ஆம் தேதி வரை மற்றும் பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் மலைக கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை.
அதேபோல, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட நாட்களில் மலைப் பாதையில் வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மலைப்படிகள், கோயில் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களது பயணங்களை முன்னேற்பாடு செய்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications