கோவை உக்கடம் மேம்பாலத்தில் என்னனு பாருங்க?.. பீதியில் உறைந்த மக்கள்.. நெடுஞ்சாலை துறை விளக்கம்
கோவை: கோவை, உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்தனர். இந்நிலையில், இந்த விரிசல் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின் முக்கியப் பேருந்து நிலையங்களில் உக்கடம் பேருந்து நிலையமும் ஒன்று. பொள்ளாச்சி சாலைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம், பாலக்காட்டுக்குச் செல்ல முக்கிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பிரதான பிரச்னையாக இருந்து வந்தது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக உக்கடம் பகுதியில் வழியாகச் செல்லும் கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலம், பாலக்காடு சாலைகளை இணைக்கும் விதமாக உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ. 470 கோடி மதிப்பில் 3.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சரியான வழிகாட்டுதல் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் வழிதவறி வேறு பாதைகளுக்கு சென்றுவிடுவதாக கூறி வருகின்றனர். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதால் உக்கடம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வந்தனர்.
இந்நிலையில், உக்கடம் மேம்பாலத்தில் கரும்புக்கடை அருகே இன்று லேசான விரிசல் ஏற்பட்டு சாலையில் மண் துகள்கள் விழுந்துள்ளது. சுமார் இரண்டடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாலம் பயன்பாட்டுக்கு வந்து 4 மாதங்களே ஆகிய நிலையில், மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். பாலத்தில் ஏற்பட்டுள்ளது விரிசல் அல்ல என்றும், பாலத்தின் இரண்டு அடுக்குகளுக்கான இடைவெளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கோயம்புத்தூர் கோட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆத்துபாலம் - உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை மேம்பால பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆத்துப்பாலம் உக்கடம் மேம்பாலத்தின் கரும்பு கடை பகுதியில் பாலத்தில் விரிசல் என சமூக வலைதளங்களில் பதிவான செய்தி முற்றிலும் தவறானது.
இன்று காலை (நவம்பர் 30) பாலத்தில் ஆய்வு மேற்கொண்டதில் தூண் எண் NP 17-இல் பாலத்தின் மேல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரிப்சீல் எக்ஸ்பான்ஷன் ஜாயிண்ட் (Strip seal Expansion Joint) நல்ல முறையில் உள்ளது. பாலத்தின் கீழ்பகுதியில் தெர்மாகோல் அட்டை வைத்து டெக்ஸ்லாப் கான்கிரீட் போடப்படும் பொழுது சிறு மீதமுள்ள சிமெண்ட் கலவை தெர்மாகோல் அட்டைக்கு கீழ்ப்பகுதியில் ஒட்டி இருந்ததால் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் பாலப்பகுதியில் உள்ள கட்டுமானங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லை பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. எனினும், இதைக் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு சுத்தம் செய்து தருமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications