வக்ஃபு திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு.. நகலை கிழித்தெறிந்து எஸ்டிபிஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவை: கோவை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலம் காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக இஸ்லாமிய முன்னோர்களால் வழங்கப்பட்ட வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் இல்லாத சொத்துக்களை போலவும், அரசாங்கத்திற்கும் அதில் குத்தகைக்கும் வாடகைக்கும் இருக்கக்கூடிய மக்களுக்கும் சொந்தமானதாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டாக்காரர்கள் தொடர்ந்து நகலை எரிக்க முயன்றபோது காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து, நகலை கிழித்தெறிந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து எஸ்டிபிஐ கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக் கூறியுள்ளதாவது: ஜனநாயக நாடான இந்தியாவில் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் 9.4 லட்சம் கோடி ஏக்கர் வக்ஃபு சொத்துக்களை மத்திய பாஜக அரசு புதிய திருத்த சட்டம் மூலம் அந்த இடங்களை ஆக்கிரமித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டி வருகிறது.
காலம் காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக இஸ்லாமிய முன்னோர்களால் வழங்கப்பட்ட அந்த சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் இல்லாத சொத்துக்களை போலவும், அரசாங்கத்திற்கும் அதில் குத்தகைக்கும் வாடகைக்கும் இருக்கக்கூடிய மக்களுக்கும் சொந்தமானதாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications