கோவை கதியை பார்த்தீங்களா.. தெரு நாய்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதாம்.. பீதியில் உலவும் மக்கள்
கோவை மாநகராட்சியில் தெருநாய்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக என்.ஜி.ஓ நடத்திய சர்வே அறிக்கை கூறுகிறது.
கோவை: கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,11,074- தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெருநாய்கள் பிறப்பு விகித்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று இது தொடர்பான சர்வே நடத்திய என்.ஜி.ஓ மாநகராட்சி ஆணையரிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
நகரங்களில் வீதிக்கு வீதி குறைந்தது நாலைந்து தெருநாய்களை எப்படியும் பார்த்து விட முடியும். தெருவின் காவல்காரர்கள் போல திரியும் இந்த நாய்களின் பார்வையில் இருந்து புதிதாக யாரும் நுழைந்து விட முடியாது.
அதுவும் இரவு நேரங்களில் தெரிந்தவர்கள் போவதே கடும் பாடுதான். மக்கள் அளிக்கும் உணவு மற்றும் குப்பைகளில் போடப்படும் வேஸ்ட் உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு இந்த நாய்கள் வளர்கின்றன. தெருநாய்கள் அதிகரிப்பால் பல்வேறு இன்னல்களும் ஏற்படுவதாக ஒரு பக்கம் குரல் எழவும் செய்கின்றன.

தெருநாய்கள் அதிகம்
அதேவேளையில் தெருநாய்களை கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கும் சில கொடூரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எது எப்படியோ மனிதனுடன் மிகவும் நெருக்கமாக பழகும் தன்மை கொண்ட இந்த நாய்களை கண்காணித்து உரிய முறையில் பரமாரிக்கும் நல் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் தெரு நாய்களுக்கு பலரும் தாமாக முன் வந்ததையே இதற்கு சான்றாக சொல்லலாம். இது ஒருபக்கம் இருக்க தெருநாய்கள் பற்றிய கண்காணிப்பு மற்றும் சர்வே பணியில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) ஈடுபடுகின்றன.

எத்தனை தெருநாய்கள் உள்ளன
அந்த வகையில் கோவையில் எத்தனை தெருநாய்கள் உள்ளன என்பது பற்றிய சர்வே கடந்த ஆண்டு மே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்றுள்ளது. கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் இந்த சர்வேயானது நடைபெற்றது. இதில் கோவையில் 1,11,074- தெருநாய்கள் உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இதன் எண்ணிக்கை 46 ஆயிரத்து 292 ஆக இருந்தது. நான்கு ஆண்டுகளில் 2 மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

தோல் நோய்கள்
இந்த சர்வே முடிவுகளை டாக்ஸ் ஆப் கோயம்புத்தூர் அமைப்பின் நிறுவனரான கேசிகா ஜெயபாலன், கோவை மாநகாரட்சி ஆணையரிடம் வழங்கினார். இந்த அறிக்கையின் படி, கோவையில் உள்ள அனைத்து பெரும்பாலான தெருநாய்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சில நாய்களுக்கு மட்டுமே தோல் நோய்கள் உள்ளிட்ட சில சுகாதார பிரச்சினைகள் இருபதாகவும் சர்வே அறிக்கையில் உள்ளது.

39 சதவீதம் பெண் நாய்கள்
கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்மார்ட் போன் செயலி மூலமாக இந்த சர்வே பணிகள் நடைபெற்றுள்ளது. நாய்களின் வயது, பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றையும் கணக்கில் வைத்து மாணவர்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். கோவையில் உள்ள நான்கு மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் வாழும் 1,11,074- நாய்களில் 90 சதவீதம் வயது வந்தவை (11 மாதங்களுக்கு மேலான நாய்கள்) என்றும் 39 சதவீதம் பெண் நாய்களும் உள்ளன.

ஆண்டு தோறும் கணக்கெடுக்க வேண்டும்
கோவை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் தெரு நாய்கள் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு தொடர்பாக கண்காணிக்கும் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு மாநில அளவிலான குழுவிற்கு அறிக்கை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். தெரு நாய்களின் எண்ணிக்கையை ஆண்டு தோறும் கணக்கெடுக்க ஆண்டு சர்வே நடத்த வேண்டும்.

கருத்தடைகள் செய்வதை அதிகரிக்கனும்
விலங்குகளின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும் போன்ற பாரிந்துரைகளும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், தெருநாய்களின் பிறப்பு விகிதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை குறைப்பதை இலக்காக வைத்துக்கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்வதை அதிகரிக்க வேண்டும்" என்ற பரிந்துரையும் வைக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications