எச்சரிக்கை மக்களே.. இது தான் கோவை Myv3ads உண்மை முகம்.. நெட்டிசன் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை Myv3ads நிறுவனத்தின் உண்மையான முகம் இது தான் என்று iRoBo_V3 என்ற நெட்டிசன் 3 ஸ்கிரீன்ஷாட்டுகளை வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

iRoBo_V3 என்ற நெட்டிசன் தொடர்ந்து கோவை Myv3ads நிறுவனம் குறித்து பல்வேறு விஷயங்களை வெளியிட்டு வருகிறார். இவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "இதுதான் MyV3adsன் உண்மை முகம்.. பேஸ்புக்கில இருக்கும் Myv3ads கும்பலின் பக்கம். கடந்த வாரம் 1.21லட்சம் பணம் செலுத்தியவர் ஆப் வேலை செய்யவில்லை என்றால் புகார் அளிப்பதாக செல்லியதற்கு அவர்களின் மிரட்டலும்,பதிலும்..! மாத்திரை வாங்கிட்ட அவ்வளவுதான்.. கொடுத்த பணத்துக்கு செட்டில் செய்துவிட்டோம் என்று முடிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க.. இதுதான் அவுங்களுக்கு எதிரா திரும்புற எல்லாத்துக்குமான பதில்..!

This is the true face of Coimbatore Myv3ads: Posted by a netizen

மோசடி கும்பல் எதிர்காலத்துல ரியாக்ட் பன்ன போற விதம் இதுதான்..! இதுதான் நடக்க போகுது..! இந்த ஸ்கிரின்சாட் நிறைய ஆட்களை சேர்த்துவிட்ட ஐடி.. கம்பெனிக்கு பாதகமும்,தன்னோட திருட்டு வேலைகளுக்கு பிரச்சனை வராம இருக்க இப்படி ஒரு பதிவு...! எச்சரிக்கை மக்களே..!" என்று கூறியுள்ளார்.

இதனிடையே அவர் வெளியிட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்டில், பணம் கட்டிய ஒருவருக்கு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு கேள்வி எழுப்பி இருந்த நபருக்கு பதில் அளித்துள்ள நிறைய நபர்களை சேர்த்துவிட்ட நபர் , தம்பி உங்களை கம்பெனி பணம் போடச்சொன்னாங்களா.. நீங்களாதான் பணம் போட்டிருக்கீங்க. சர்வர் பிரச்சனையால் தான் ஓபன் ஆகவில்லை.. இப்போ ஓபன் ஆகுது.. கொஞ்ச நேரம் கூட பொறுக்க முடியலை என்றால் எதற்கு சேர வேண்டும்...

முதலில் காத்திருக்க வேண்டும்... புரிகிறதா... நீ போட்டு இருக்கிற இந்த கமெண்டை வைத்தே உன் ஐடியை பிளாக்க பண்ண வைக்கிறேன் வெயிட் பண்ணு தம்பி.. நம்பிக்கை இல்லாதவன் இந்த கம்பெனிக்கு தேவை இல்லை " என்று கூறியுள்ளார். இன்னொரு ஸ்கிரீட் ஷாட்டில் இதில் வரும் லாப நஷ்டங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று யூடியூபர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்,.

சனிக்கிழமை என்ன நடந்தது: கோவை Myv3ads நிறுவனத்தி நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், போலீசாரிடம் தங்களது நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றார்கள்.

அப்போது போலீசார், தற்போது போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வு கூட்டத்தில் உள்ளார், எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள் ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தார்கள். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தார்கள். இதிர்ல சக்தி ஆனந்தனை மட்டும் கோர்ட்டில் கோவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+