டோக்கன் இருந்தால் போதுமா? விரல் ரேகை இல்லையெனில் பொங்கல் பரிசு 2026 கிடைக்குமா? அரசின் நல்ல தீர்வு
கோவை: தமிழகத்தில் 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதில் 2.22 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது... இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.. எனினும் சில ரேஷன் கடைகளில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தவாறே உள்ளன.. இதற்கெல்லாம் நம்முடைய அரசு, தற்போது தீர்வை வழங்கி உள்ளது.. இது குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் ஜனவரி 8ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகுப்புகளை பெற ரேஷன் கடைகளில் உள்ள PoS கருவி மூலம் ஆதார் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் வழங்கப்படுகிறது.
விரல் ரேகை சரிபார்ப்பு - குடும்ப அட்டைதாரர்கள்
எனினும் சில இடங்களில் பொங்கல் தொகுப்பு வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்கள் சிலரது கைரேகையை பயோமெட்ரிக் மிஷின் ஏற்காததால், பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது...
குறிப்பாக முதியவர்கள், விரல் ரேகை சரியாகத் பதிவு செய்ய முடிவதில்லை.. பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஓரிருநாள் மட்டுமே நிலையில் இது பயனாளர்களுக்கு கவலை உருவாக்கியுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுத்து "முதல்வர் தாயுமானவர்" திட்டத்தில் கைரேகை சாத்தியமில்லாத நிலையில், கையொப்பம் பெற்று பொருட்களை வழங்கி வருகிறது போல, பயோமெட்ரிக் மிஷினில் கைரேகை ஏற்காத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.
கருவிழி சரிபார்ப்பு - பொங்கல் பரிசு
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ரேஷன் கடை ஊழியர்கள், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.. இந்நிலையில், விரல் ரேகை பதிவாகாத பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கருவிழி சரிபார்ப்பின் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை வெளியிட்ட உத்தரவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது..
அதாவது விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் ஏற்பட்டால், அந்த வகை பயனாளர்களுக்கு கண்ணின் கருவிழி ரேகை சரிபார்ப்புக் கருவியை பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என்றும் இதன் மூலம் பயனாளர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் எந்தவிதமான சிரமத்துக்கும் ஆளாகாமல் பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் இருந்தாலும் பரிசு
இந்த உத்தரவானது கோவை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து ரேஷன்தாரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது. காரணம், கோவையிலும் கைரேகை சரிபார்ப்பு விழாததால் கோவையில் சிலருக்கு பரிசு வழங்க முடியாமல் தடைகள் ஏற்பட்டன.
ஆனாலும் அவர்களுக்கு முன்பே வழங்கப்பட்ட டோக்கன் இருப்பதால், அந்த டோக்கனின் அடிப்படையில் பரிசு தொகுப்பு பெற முடியும் என உறுதி தரப்பட்டுள்ளது.. அதாவது டோக்கன் பெற்ற பயனாளர் பரிசை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம்..
விரல் ரேகை மூலம் அல்லது கருவிழி பதிவு மூலம் அல்லது கார்டுதாரர்களை போட்டோ எடுத்தும் அல்லது டோக்கன் அடிப்படையில் என ஏதாவது ஒரு ரூபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications