கோவையில் வடமாநில ஊழியர்கள் அட்டூழியம்.. இறந்த பெண்ணிடம் போய் இப்படியா? அதிர்ச்சியில் உறைந்த கணவர்!
கோயம்புத்தூர்: கோவை KMCH மருத்துவமனையில் வடஇந்திய ஊழியர் ஒருவர் இறந்த பெண்ணிடம் திருடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி யசோதா. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யசோதா சிகிச்சைக்காக, கோவை சிட்ரா பகுதியில் உள்ள கே.எம்.சி.எச் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மரணம்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் யசோதாவின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சமீபத்தில் முருகசாமி வங்கிக்கு சென்றுள்ளார்.அப்போது யசோதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, அதிலிருந்த 8.5 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பணத்தை காணோம்
இதையடுத்து முருகசாமி அந்த பணம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த, 2021 மே மாதத்திற்கு பிறகும் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது அவர் இறந்த பின் வங்கி கணக்கில் இருந்து பணம் debit ஆகி இருக்கிறது. இதை கேட்டு அங்கேயே முருகசாமி அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்தார்.

மனைவி துக்கம்
மனைவி இறந்த துக்கத்தில் இருந்தவருக்கு இந்த செய்தி இடியாக வந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த முருகசாமி உடனடியாக கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் இருந்த நிர்வாகிகள் யாராவது எடுத்து இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர். யசோதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது அறையை அடிக்கடி சுத்தம் செய்யும் பணியில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

யார் எடுத்து
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் அதுல்ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.8.5 லட்சம் பணத்தை இருவரும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. பில் கட்ட பின் சொல்லுங்கள் என்று ஏடிஎம் பின்னை அந்த பெண்ணிடம் வாங்கி.. கடைசியில் அவர் இருந்ததும் அதை பயன்படுத்தி இவர்கள் பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரு ஊழியர்களும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications