கருணாநிதி அடிக்கடி கூறுவது- கூடா நட்பு கேடாய் முடியும்.. இது திமுகவுக்கு பொருந்தும்- பொன்னார் பொளேர்
கோவை: கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்தால் கருணாநிதி அடிக்கடி சொல்லும் கூடா நட்பின் விளைவை திமுக அனுபவிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்
இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வந்துள்ளேன். நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றார்.

செவிப்பறைகள்
எமர்ஜென்ஸியை விட மோசமான ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விற்கு, இந்த ஆட்சியில் எத்தனை சிட்டிபாபுகள் கொல்லப்பட்டுள்ளனர்? எத்தனை ஆற்காடு வீராசாமி போன்ற பெரியவர்கள் செவிப்பறைகள் நொறுக்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பினார்.

திமுக- காங்கிரஸ்
திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டணி அவருக்காக உயிர்த் துறந்த சிட்டிபாபு போன்றவர்களுக்கு செய்யப்படும் துரோகம். மிகப்பெரிய, சரிவை தோல்வியை திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்திக்கவுள்ளது.

காங்கிரஸுடன் கூட்டணி
1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது கொள்ளை அடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸுடன் வைத்திருந்த கூட்டணியில் கொள்ளையோ கொள்ளை அடிக்கப்பட்டதற்கு ஆ.ராசாவும், மன்மோகன் சிங்கும் ஒருவருக்கொருவர் சாட்சி சொல்லி வருகின்றனர்.

சிவாஜியை மிஞ்சிய கட்சிகள்
எனவே எது கொள்ளை ஆட்சி என்பது அவர்களுக்கு தெரியும். மேகதாது விவகாரம் தொடர்பாக இங்கு நடத்திய கூட்டத்தை திமுக, காங்கிரஸ் பெங்களூரில் நடத்திருக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியினரின் நடிப்பு நவராத்திரி சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பாக இருக்கிறது.

பார்வை
உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications