அடடே.. சூப்பர் முயற்சியில் இறங்கிய வானதி சீனிவாசன்.. அது என்ன வாகனம் என்று பாருங்கள்!
கோவை : பாஜக சார்பில் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை நேற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இதை இயந்திரத்தினை கோவை மாநகராட்சி முன் களப்பணியாளர்கள் முதலில் பயன்படுத்தினர்.
இந்த நீராவி இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு பாஜகவினர் இன்று கோவையில் அர்பணித்துள்ளனர். இந்த நடமாடும் இயந்திரத்தில் விருப்பம் உள்ளவர்கள் ஆவி பிடிக்கலாம்.

கொரோனா பாதிப்பு
கோவையில் கொரோனா தொற்று பரவல் மிக உச்சமாக உள்ளது. தினசரி 3 ஆயிரம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 20 பேர் தினமும் இறக்கும் அளவிற்கு நிலைமை காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நிவாரண உதவிகள்
கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், பொதுமக்கள் அதில் அக்கறைகாட்டினால் தீர்வு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் அரசை தாண்டி அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்குவது கபசுரகுடிநீர் வழங்குவது, நிவாரணம் வழங்குவது போன்றவற்றை அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர்.

ஆவி பிடிக்க இயந்திரம்
அந்த வகையில் தமிழக பாஜகவினர் கோவையில் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளனர். அந்த இயந்திரத்தில் யார் வேண்டுமானாலும் வந்து ஆவிபிடித்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினைக்கு ஆவிபிடிப்பது நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் தினமும் பலர் வீடுகளில் ஆவி பிடிக்கிறார்கள்.

பொதுமக்கள் வரவேற்பு
அந்த வகையில் கோவையில் பாஜகவினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அதை கோவை மாநகராட்சி முன் களப்பணியாளர்கள் இதை முதலில் பயன்படுத்தினர். பாஜகவின் இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications