• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இன்றைய தொழில்நுட்பம் 10, 15 வருசமாக உழைப்பவர்களை வெறும் 5 நிமிடத்தில் காலி செய்கிறது.. வானதி

|

கோவை; தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் பத்து பதினைந்து வருடங்கள் உழைப்பவர்களை வெறும் ஐந்தே நிமிடத்தில் காலி செய்வது போல் உள்ளது என வேதனை தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், பாஜகவினர் போல் உடை அணிந்து யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கோவையில் கடந்த 31ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் தேர் நிலை திடல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

அதில் பாஜக இந்து முன்னணி அமைப்பினர் கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தி கற்களை கொண்டு தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவா் அகமது கபீா், மாவட்ட ஆட்சியா் நடராஜனிடம் வியாழக்கிழமை மனு அளித்தார்.

ஆட்சியரிடம் புகார்

ஆட்சியரிடம் புகார்

இந்நிலையில் அது காவல்துறையினரின் முறையான பாதுகாப்பு வழங்காமல் இருந்தது தான் அந்த சர்ச்சைக்கு காரணம் என்றுவானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். அதில், கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

12 மணி நேரம் விசாரணை

12 மணி நேரம் விசாரணை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், சமூகங்களுக்கு இடையே அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியரை பரிந்துரைத்துள்ளோம். நேற்று கூட பாஜக தொண்டர்களை அழைத்து சென்று உணவு கூட வழங்காமல் 12 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம் வேண்டாம்

விளம்பரம் வேண்டாம்

தற்பொழுது கோவைக்கு புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அதிமுக வழக்குத் தொடுத்தால் அதனை விசாரிப்பது இல்லை ஆனால் திமுகவினர் புகார் தொடுத்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்கின்றனர் போன்ற தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளது. இனி எனது பெயரில் செய்தித்தாள்களில் விளம்பரம் தரக்கூடாது என்று அறிக்கை விடுத்துள்ளேன்.

தவறான செய்திகள்

தவறான செய்திகள்

தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் பத்து பதினைந்து வருடங்கள் உழைப்பவர்களை வெறும் ஐந்தே நிமிடத்தில் காலி செய்வது போல் உள்ளது. நேற்று பாஜகவினரின் 6 வாகனங்கள், பூர்த்தி செய்யப்பட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

காவல்துறை செயல்

காவல்துறை செயல்

இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் காவல்துறையினர் மீது தனிப்பட்ட முறையில் கூட நாங்கள் வழக்கு தொடர்வோம். நாங்கள் அதுபோல் செய்வதில்லை அது போல் செய்பவர்களும் நாங்கள் அல்ல.

ஆட்சியரிடம் புகார்

ஆட்சியரிடம் புகார்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியின் ஆடைகளை அணிந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

 
 
 
English summary
coimbatore south BJP candidate Vanathi Srinivasan laments that the current technology is like evacuating ten to fifteen years of workers in just five minutes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X