கோவையில் குட்டியை மீட்டுக்கொடுத்த வனத்துறை.. பதிலுக்கு தாய் யானை செய்த செயல்.. இதயத்தை தொட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை, போராடி மீட்டு தாய் யானையுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளனர். அதற்காக தாய் யானை வனத்துறை அதிகாரிகளுக்கு தும்பிக்கையை உயர்த்தி நன்றி கூறியது. இதை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.

கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் முழுமையாக மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது. கேரளாவின் நுழைவு பாதைகளில் மட்டும் ஆங்காங்கே கணவாய்கள் உள்ளது. முழுமையாக அடந்த வனப்பகுதிகள் கேரளாவை ஒட்டி கோவை மாவட்டத்தில் காணப்படுகிறது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன..

 Video: Mother elephant thanks forest department for rescuing baby elephant in Coimbatore

குறிப்பாக யானைகள் அதிக அளவில் உள்ளன. யானைகள் வழித்தடமே கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கிறது. யானைகளின் முக்கியமான வாழ்விடமாகவும் கோவை மாவட்ட வனப்பகுதிகள் உள்ளன. கோவை மாநகரை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் வனப்பகுதியும், பொள்ளாச்சி ஆழியார் பகுதிகள் யானைகள் அதிகம் வாழும் பகுதிகளாக உள்ளன.

யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், யானைகளை காக்கவும் வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாவட்ட வனப்பகுதியில் எடுத்து வருகிறது. உதாரணமாக செல்ல வேண்டும் என்றால், மொத்த கேரளாவிற்கும் மிகப்பெரிய ரயில் வழித்தடம் என்றால் அது கோவை பாலக்காடு ரயில் வழித்தடம் தான்.. ஆனால் ரயில் வழித்தடம் செல்லும் பாதை என்பது அடர்ந்த வனப்பகுதி என்பதை தாண்டி யானைகள் கடந்து செல்லும் முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த பகுதியில் யானைகள் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கால்வாயில் அதிக அளவு தண்ணீர் ஒடிக்கொண்டிருந்தது. இதில் குட்டி யானை தவறி விழுந்தது. அப்போது தாய் யானை குட்டி யானையை ஆற்று வெள்ளத்தில் இருந்து மீட்க கடுமையாக போராடியது. ஆனால் தாய் யானையால் மீட்க முடியவில்லை.. இதை பார்த்து வனத்துறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நேரில் வந்து ஆபத்துக்கு நடுவே மீட்டு தாய் யானையுடன் குட்டி யானையை சேர்த்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தாய் யானை, வனத்துறை அதிகாரிகளை பார்த்து தும்பிக்கையை உயர்த்தி நன்றி தெரிவித்துவிட்டு சென்றது. இதனை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன் யானையை மீட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+