எஸ்.பி.வேலுமணி ஒன்றும் தேசியத் தலைவர் அல்ல.. அவரது உண்மை முகம் எனக்குத் தெரியும் -சீறும் விஷ்ணுபிரபு
கோவை: சோதனை நடத்தக் கூடாது எனச் சொல்ல எஸ்.பி.வேலுமணி ஒன்றும் தேசியத் தலைவர் அல்ல என்றும் அவரது உண்மை முகம் தன்னை போன்றவர்களுக்கு தான் தெரியும் எனவும் கூறுகிறார் கோவையை சேர்ந்த விஷ்ணுபிரபு.
மேலும், கோவையில் ஏற்கனவே கொரோனா அதிகமாக பரவிவரும் சூழலில், அதைப்பற்றி சிறிதும் கவலையின்றி சுயநலத்துக்காக கூட்டத்தை கூட்டியிருக்கிறார் வேலுமணி என குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில துணைச் செயலாளராக இருந்து, இப்போது திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் விஷ்ணுபிரபு இது தொடர்பாக நமக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்..?
பதில்: நியாயமான நடவடிக்கையாக தான் பார்க்கிறேன். ஏனெனில் இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. குறிப்பாக அம்மாவின் மறைவுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கே.பி.ராஜூவிடமும், திருப்பூர் சிவசாமியிடமும் தினமும் ஆஜராவதையே தனது தொழிலாக கொண்டிருந்த எஸ்.பி.வேலுமணி, இன்று பல நூறு கோடிகளுக்கு சொந்தக்காரர். கோவையை சேர்ந்தவன் என்ற முறையிலும், அதிமுகவில் மாநில நிர்வாகியாக இருந்த அனுபவத்திலும் சொல்கிறேன், நேற்றைய தினம் ரெய்டு நடத்தப்பட்ட இடங்கள் மட்டும் வேலுமணிக்கு தொடர்புடையதல்ல. இது போன்ற இன்னும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கே.ஸ்மார்ட் நிறுவனத்தை கூறலாம்.
கேள்வி: தொண்டர்கள் திரளாக கூடியது அவருக்கான செல்வாக்கை தானே காட்டுகிறது, அப்படியிருக்கும் போது அதை விமர்சிப்பது நியாயமா..?
பதில்: நல்ல கேள்வி தான், தொண்டர்கள் எங்கு திரளாக கூடினார்கள் என்கிறீர்கள். எல்லாம் அழைத்து வரப்பட்டவர்கள். கட்சி பொதுக்கூட்டத்துக்கு காசு கொடுத்து அழைத்துச் செல்வதை போல் தனது வீட்டுக்கும் வேலுமணி ஆட்களை அழைத்து சென்றிருக்கிறார். தன் மீது எந்த தவறும் இல்லை என்றால் பிறகு எதற்கு அவர் அஞ்சிக்கொண்டு, அப்பாவி தொண்டர்களை கேடயமாக பயன்படுத்த வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், கோவையில் தான் ஏற்கனவே கொரோனா அதிகமாக பரவிவருகிறது. இந்த சூழலில் இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது சுயநலதுக்காக கூட்டத்தை கூட்டி கொரோனா பரவலுக்கு வழி செய்துவிட்டார் வேலுமணி. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு வரும் அளவுக்கு வேலுமணி ஒன்றும் தேசியத் தலைவர் அல்ல. அவர் ஒரு சாதாரண எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், அவ்வளவு தான்.
கேள்வி: பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அதிமுக தலைமை கூறியிருக்கிறதே?
பதில்: கடந்த 2017-ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தி தனி அணியாக செயல்பட்ட போது, இதே ஓ.பி.எஸ்.தான் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி மேடை போட்டு விமர்சித்தார். அதை யாரும் மறக்கமாட்டார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இப்போது என்னவென்றால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அறிக்கை விடுகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது. இன்னொருவர் இருக்கிறார் (இ.பி.எஸ்.ஸை சொல்கிறார்), அவருக்கு தெரியாமல் வேலுமணியால் இவ்வளவு தூரம் செயல்பட்டிருக்கவே முடியாது.
கேள்வி: இன்னும் விசாரணையே நடக்காத போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வேலுமணி ஊழல் செய்துவிட்டார் என்கிறீர்கள்..?
பதில்: நான் வெளியூர்காரன் அல்ல. எஸ்.பி.வேலுமணி அரசியல் செய்யும் இதே கோவையை சேர்ந்தவன் தான் நானும். நகைக்கடையில் மாதச்சம்பளத்துக்கு வேலைப்பார்த்தவர் தான் வேலுமணியின் அண்ணன் அன்பரசன். இதை அவர் கூட வேலை செய்தவர்களிடம் நீங்களே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு சிரமமாக இருந்தால் சொல்லுங்கள், வேலுமணி அண்ணனோடு நகைக்கடையில் வேலைப் பார்த்தவர்களை நான் சந்திக்க வைக்கிறேன். கே.பி.ராஜூவிடமும், திருப்பூர் சிவசாமியிடமும் ஒட்டிக்கொண்டு திரிந்தவர் வேலுமணி. இப்படிப்பட்ட இந்த சகோதரர்களுக்கு இன்று பல நூறு கோடிகள் மதிப்பில் சொத்து சேர்ந்தது எப்படி? இவர்களை பற்றி வெளியூர்காரர்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்னை போன்று கோவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வேலுமணி சொத்து சேர்த்தது எப்படி என்பது தெரியும். எல்லா தகுதிகளும் இருந்தும் எஸ்.எஸ்.டெக்னாலஜி என்ற நிறுவனத்தை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்த பணிகளில் இருந்து விலக வைத்தவர் எஸ்.பி.வேலுமணி. இது போன்று அவர் மிரட்டல் உருட்டல்களை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
கேள்வி: உங்களுடைய குற்றச்சாட்டு இப்படியிருக்கிறது, ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது வேலுமணி வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதை போல் தெரியவில்லையே..?
பதில்: எல்லாவற்றையும் தான் அவர் பதுக்கிவைத்துவிட்டாரே, பிறகு எப்படி கிடைக்கும். நேற்று நடந்த சோதனையை டிரைலராக தான் பார்க்கிறேன். இன்னும் இது போன்ற சட்ட நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications