10.. 32.. 1228.. காரில் ஏறு.. "வேலுமணி மகனை பிடித்த விஜிலன்ஸ்".. 9 மணி நேரம்.. வெலவெலத்த கோவை!
கோயம்புத்தூர்: நேற்று அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது அவரின் மகனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நேற்று மாஜி அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி வீட்டிலும்.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் நடத்தப்பட்ட ரெய்டுகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி வேலுமணி வீட்டில் நேற்று நடத்தப்பட்ட ரெய்டு மூன்றாவது ரெய்டு ஆகும்.
ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் ஒருமுறை ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் அந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இரண்டாவது முறை ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது மூன்றாவது முறையாக ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

வேலுமணி ரெய்டு ஏன்?
5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. இப்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு, 2019ல் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. சந்தை விலையை விட அதிக விலைக்கு இவர் பல்புகளை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது. அரசுக்கு இதில் 74 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் தெரிய வந்துள்ளது.

பின்னணி காரணம்
அவருக்கு சொந்தமான 31 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் அவரின் வீட்டில் இருந்து 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி, 10 கார்கள், 316 ஆவணங்கள், வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த ரெய்டில் எதிர்பார்த்ததை விட போலீசார் அதிகம் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு முக்கியமான சில ஆவணங்களையும் போலீசார் நேற்று பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை
நேற்று இந்த ரெய்டுக்கு இடையில் இன்னொரு விசாரணையும் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்தது. அவரின் மகன் விகாஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். நீங்கள் வெளிநாட்டில் படித்தது எப்படி? அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? அதற்கு கட்டப்பட்ட தொகைக்கான ஆவணங்கள் எங்கே? உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பண விவரங்கள் என்னென்ன? என்று அதிகாரிகள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அதேபோல் வேலுமணியின் வங்கி பண பரிவர்த்தனைகள் பற்றியும் மகனிடம் கேட்டனர்.

கார்
முக்கியமாக வீட்டில் இருந்த சொகுசு கார்கள் பற்றியும் கேள்விகளை எழுப்பினர். அந்த சொகுசு கார்கள் எப்படி வந்தது என்று கேட்டதோடு.. அந்த காரில் ஏறி சோதனை செய்தனர். கார் உள்ளே விகாஷை வர சொல்லி அங்கும் கேள்விகள் எழுப்பினர். இவரிடம் மொத்தம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலம் அடிப்படையில் வீட்டில் இருந்த 10 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications