கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலை தோற்க என்ன காரணம்? ஆச்சர்யமான 2 விஷயங்கள்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவியதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கோவையில் தனி வார் ரூம், கோவைக்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை, மத்தியில் ஆளும் கட்சி என்ற பலம், கொங்கு பகுதியில் உள்ள செல்வாக்கு என எல்லாவற்றையும் மீறி அண்ணாமலை தோற்க இரண்டு காரணங்கள் உள்ளன.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கோவையில் கல்லூரி படிபபை முடித்தவர், 2011-ல் ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானார். 2019 வரை காவல் அதிகாரியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்தார். கடைசியாக 2019ல் பெங்களூருவில் காவல் துணைஆணையராக இருந்தவர், விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு சில மாதம் அமைதியாக இருந்தார்.

அதன்பிறகு 2020ல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த உடனேயே அண்ணாமலைக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேநேரம் 2021 சட்டசபை தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வென்றதையடுத்து பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகன், மத்திய அமைச்சர் ஆனார். இதையடுத்து 2021ல் பாஜக மாநில தலைவர் பதவி அண்ணாமலைக்கு கிடைத்தது.
2021க்கு பிறகு பாஜகவின் அரசியல வியூகங்கள் அடியோடு மாறின. தமிழிசை காலத்தில் இருந்த பாஜகவிற்கும், எல் முருகன் காலத்தில் இருந்த பாஜகவிற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத அளவிற்கு அண்ணாமலை தலைமையிலான பாஜக செயல்பட்டது. தினசரி பிரச்சனைகள் தொடங்கி, பெரிய பிரச்சனைகள் வரை மாநிலத்தை ஆளும் திமுகவை அண்ணாமலை தலைமையிலான பாஜக கடுமையாக விமர்சித்தது. ஆளும் திமுகவை மட்டுமின்றி அவ்வப்போது அதிமுகவையும் விமர்சித்து வந்தது.
திமுகவிற்கு எதிராக ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அண்ணா, ஜெயலலிதா என யாரையும் அண்ணாமலை விட்டுவைக்கவில்லை.. ஒரு கட்டத்தில் திமுகவைவிட அதிமுகவைத்தான் அதிகமாக தாக்கத்தொடங்கியது.. அண்ணாமலை தலைமையிலான மாநில பாஜக.. இது ஒருபுறம் எனில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக 2026ல் ஆதரவு தருவது குறித்து தெளிவாக பதில் அளிக்கவில்லை.. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இதனிடையே திமுக அதிமுகவிற்கு மாற்றாக பாஜகவை வளர்க்க விரும்பிய அண்ணாமலை தனி அணி அமைத்து போட்டியிட விரும்பினார். அதற்கு மேலிடமும் பச்சை கொடி காட்டிய நிலையில், அண்ணாமலை, 'என் மண் என் மக்கள் யாத்திரை' மேற்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அமைச்சர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.
மறுபக்கம் பாஜகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ள கோவை தொகுதியில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் கோவையில் அண்ணாமலை போட்டியிட போகிறார் என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்த திமுக தலைமை, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையை தரவில்லை.. திமுக மிக எளிதாக ஜெயிக்கக்கூடிய திண்டுக்கல் தொகுதியை தூக்கி கொடுத்தது. அண்ணாமலையை தோற்கடிக்க திமுக தலைமை நேரடியாக களத்தில் இறங்கியது. திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டார்..
மறுபக்கம் அதிமுகவும் அண்ணாமலையை தோற்கடிக்க கடும் வியூகம் வகுத்தது. அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியே முன்னின்று பணிகளை செய்தார். அதேநேரம் அண்ணாமலை திமுக, அதிமுகவின் போட்டிகளுக்கு நடுவே, கோவையில் தனி வார் ரூம் அமைத்து பிரச்சார வியூகம் வகுத்தார்.. அதேபோல் கோவைக்கு என்று தனி தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார். இவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
பாஜக தேசிய தலைமை இவரது வெற்றியை மிகவும் எதிர்பார்த்தது. ஆனால் அண்ணாமலை, 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதிலும், கோவை தொகுதியில் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3 இடத்தையே பிடித்தார்.
அதிமுக + பாஜக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக கோவை லோக்சபா தொகுதியில் எல்லா இடங்களிலும் அதிமுகதான் (கோவை தெற்கு மட்டும் பாஜக) வெற்றி பெற்றிருந்தது. அப்படி இருந்தும் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை அண்ணாமலை பிடித்திருப்பதை அரசியல் கட்சிகள் ஆச்சர்யமாக பார்க்கின்றன.
அதேநேரம் அண்ணாமலை தேற்க காரணமும் இருக்கிறது. கோவையில் அதிமுக பாஜக சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக பாஜக ஜெயித்திருக்க வாய்ப்பு உள்ளது. வாக்குகள் கணிசமாக அதிமுகவால் பிரிந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.. அதேநேரம் சிறுபான்மை ஓட்டுகள் மற்றும் தலித் ஓட்டுகள் மிகப்பெரிய அளவில் விழுந்ததே திமுக வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பாஸ் திட்டம் ஆகியவை திமுகவுக்கு கை கொடுத்துள்ளது. ஏழை மக்கள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே 1000 மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளதால் அவர்கள் அப்படியே திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். திமுக ஜெயிக்காமல் போனால் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போகுமோ என்ற அச்சமும் திமுகவிற்கு சாதகமாகவும் அண்ணாமலைக்கு பாதகமாகவும் அமைந்தது. இது அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் மட்டுமல்ல எல்லா தொகுதியிலும் இதுதான் நிலைமை.
அதேநேரம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. திமுக, அதிமுக இல்லாமல் போட்டியிட்டு 11 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பாஜக வாங்கி உள்ளது. கணிசமான தொகுதிகளில் பாஜக 2ம் இடம் பிடித்துள்ளது. பாஜகவின் இந்த வளர்ச்சி உண்மையில் அபாரமானது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். 2026ல் விஜய் அரசியல் வருகை திமுக, அதிமுகவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் அப்போது மிக அதிகமாக இருப்பார்கள். எனவே அண்ணாமலை அதை மனதில் வைத்துதான் பாஜவை தனித்து நிற்க வைத்திருப்பார் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications