Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நடமாடும் நகைக்கடை.. 2 கிலோ 400 கிராம் தங்கத்துடன் வலம் வந்த ரஜிமோன்.. யார் இவர்? வியப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ரூ.1.64 கோடி மதிப்பிலான 2 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்க நகைகளுடன் வலம் வந்த நபரை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். நடமாடும் தங்க கடையாக இருந்த இவரை பார்த்தும் பொதுமக்கள் ‛செல்பி' எடுத்து மகிழ்ந்த நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை கொடிசியா அரங்கில் ஆண்டுதோறும் வேளாண் கண்காட்சி நடந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வேளாண் துறை சார்ந்த உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கோவை இன்டெக்ஸ் 2024 கண்காட்சி என்பது கடந்த 11ம் தேதி தொடங்கியது.

covai coimbatore

இந்த கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடந்த கண்காட்சியில் தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த வேளாண் துறை சார்ந்த நிறுவனங்கள் ஸ்டால் அமைத்து தங்களின் உற்பத்தி பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறினர். இந்த கண்காட்சியில் ஏராளமான நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தன. அதனை விவசாயிகள் பார்த்து சென்றனர்.

இந்த வேளையில் தான் ஒருவர் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த தங்க நகைகளாகும். கழுத்து நிறைய செயின், விரல் முழுவதும் மோதிரம், கை நிறைய தங்க காப்புகள் அணிந்து அவர் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தார். இவரை பார்த்த பலரும் வியந்து போயினர். மேலும் அவரிடம் சென்று ‛செல்பி' வீடியோ எடுத்து கொண்டனர்.

இவர் யார் என்று விசாரித்தபோது தான் அவர் கர்நாடகாவை சேர்ந்த ரஜிமோன் என்பதும், கண்காட்சியில் அவர் சார்ந்த நிறுவனத்தின் பொருட்களை காட்சிப்படுத்த வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் அணிந்திருக்கும் நகை, நகை அணிய எப்படி ஆர்வம் வந்தது? அவர் அணிந்துள்ள நகைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு எவ்வளவு? என்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ரஜிமோன் கூறிய பதில் அனைவரையும் வியப்படைய செய்தது. இதுபற்றி ரஜிமோன் கூறியதாவது: நான் தங்க நகைகளை தினமும் அணிவித்து கொள்கிறேன். 2010ல் இருந்து நகைகளை அதிகம் அணிந்து வருகிறேன். முதலில் ஒவ்வொரு நகைகளை அணிந்து இப்போது இவ்வளவு நகைகளை அணிந்துள்ளேன். இது தான் எனது ஸ்டைல். கண்காட்சிகளில் ‛ஸ்டால்' அமைக்கும்போது மக்களை என்னை பார்த்து என்னுடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன்மூலம் நானும், எனது நிறுவனமும் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைகிறது.

இப்போது நான் 2 கிலோ 400 கிராம் நகைகளை அணிந்து கொள்கிறேன். எனக்கு 5 கிலோ வரையிலான நகைகளை அணிய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1.62 கோடியாகும். வளையல், செயின், மோதிரம், போட்டுள்ளேன். 18 காப்பு, 5 செயின், 17 மோதிரம் அணிந்துள்ளேன். எல்லாம் 22 காரட் நகையாகும்.

இந்த நகை அணியும் ஆர்வம் என்பது யோயோ ஹனிசிங்கை பார்த்து தான் எனக்கு வந்தது. முதலில் பொழுதுபோக்குக்காக நகைகளை அணிய ஆரம்பித்தேன். இப்போது நகை இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு வந்துள்ளேன். நான் தைரியமானவன். இதனால் பொதுவெளியில் நான் தனியாக தான் சென்று வருகிறேன். எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இவ்வளவு நகை அணிந்தும் இதுவரை ஆபத்தான சூழலை நான் எதிர்கொள்ளவில்லை.

covai coimbatore

நகை என்பது பெண்கள் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. ஆண்களும் அணியலாம். ஆனால் அதற்கு Source இருக்க வேண்டும். குறிப்பாக இவ்வளவு நகைகளை அணிய தைரியம் வேண்டும். பயந்தால் நம்மை மிரட்ட ஆட்கள் இருப்பார்கள். பயப்படாமல் தைரியமாக இருங்கள் ஒன்றும் ஆகாது என்ற மெசேஜை நான் சொல்லி கொள்கிறேன். என்னை பலபேர் ‛கோல்ட்மேன்' என சொல்கின்றனர்.

இந்த நகைகளை காலையில் அணிந்து இரவில் கழற்றி வைப்பேன். காலையில் ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் நகைகளை அணிந்து கிளம்ப எனக்கு ஒரு மணிநேரம் தேவைப்படுகிறது. நகை வாங்கினால் போட வேண்டும். இல்லாவிட்டால் வாங்க கூடாது. பலபேர் நகைகளை வாங்கிவிட்டு அணிவிப்பது இல்லை. அப்படி இருக்க கூடாது. இந்திய கலாச்சாரத்தில் நகை அணிவது என்பது ஒரு அடையாளமாக உள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+