அசையாமல் கிடந்த பெண்.. கிட்ட போன கோவை ஜனம்.. அடடடா.. கோயம்புத்தூர் காந்திநகர் பஸ் ஸ்டாண்டே சுத்துதே
கோவை: ஹைதராபாத்தை தொடர்ந்து, கோயம்புத்தூரில் அடுத்த சம்பவம் நடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன.
4 நாட்களுக்கு முன்புதான், ஐதராபாத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அரசு பஸ்சில் பெண் ஒருவர் ஏறியுள்ளார்... பஸ்ஸில் ஏறியதுமே, வித்யாநகர் சிக்னலில் தன்னை இறக்கிவிடும்படி, பணியிலிருந்த பெண் கண்டக்டரிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், வித்யாநகர் சிக்னலில் நிறைய டிராபிக் இருந்தால், பஸ்ஸை நிறுத்த முடியவில்லை. அடுத்து வரும் ஸ்டாப்பில் வண்டியை நிறுத்துவதாக பெண் கண்டக்டர் சொன்னார். இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த பெண் பயணி, கண்டக்டருடன் சண்டைக்கு போய்விட்டார். டிராபிக் பிரச்சனையை சொல்லியும் அந்த பெண் பயணி கேட்கவில்லை. தொடர்ந்து கண்டக்டரிடம் தகராறு செய்தார்.
டிராபிக்: டிராபிக்பிக்கில் ஊர்ந்து வண்டி சென்றதால், இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், பணியில் மும்முரமாகயிருந்தார் பெண் கண்டக்டர்.. அப்போது அந்த பெண் பயணி, ஆத்திரமடைந்து, திடீரென தன்னுடைய பைக்குள் கையை விட்டு, மறைத்து கொண்டு வந்த பாம்பை கண்டக்டர் மீது வீசிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்டக்டரும், சக பயணிகளும் அலறினர். இதனால், பஸ்சை உடனடியாக டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து, பஸ்சில் இருந்து கீழே குதித்த பெண் பயணி, ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது..
பெண் பயணி: இதையடுத்து, அங்கிருந்து அப்பெண் தப்பியோடினார். அப்போதுதான் தெரிந்தது அந்த பெண் பயணி மதுபோதையில் இருந்தாராம்.. இந்த சம்பவம் குறித்து, பெண் கண்டக்டர் போலீசில் புகார் தந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் பயணி கைது செய்யப்பட்டார். இந்த பெண்ணின் கணவர், பாம்புகளை பிடிக்கும் வேலை செய்பவராம். அதனால்தான், போதையில் கையில் பாம்புகளை வைத்து சுற்றிக்கொண்டிருப்பாராம்.
பெண் மதுபோதையில் செய்த இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கோவை காந்திபுரத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரத்தில், ஒரு பெண் மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார்.
பெண் போதை: 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. நீண்ட நேரமாகவே அசைவின்றி கிடந்தார்..
அங்கு ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசாரும், பெண்ணின் போதை நிலையை அறிந்து அப்படியே விட்டு சென்றனர்.
மதிய நேரத்தில் விழுந்து கிடப்பதால், ஒருவேளை அவர் இறந்து கிடக்கிறாரா? என்று அந்த பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.. மேலும் வெள்ளை துணியால் உடல் போர்த்தியிருந்தால், அனைவருமே பயந்துவிட்டார்கள்.. அதனால், அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தனர்.
மதுபானம்: அப்போதுதான், அந்த பெண் காலையிலிருந்தே அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மதியானம் போதை தலைக்கேறிய நிலையில் சாலையோரம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதை கவனித்த ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசாரும், பெண்ணின் போதை நிலையை அறிந்து, அப்படியே விட்டுவிட்டு சென்றார்கள்.
பிறகு, பொதுமக்கள் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும், பொதுமக்களும் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த அந்த சிக்னலில் திரண்டு வந்துவிட்டனர்.. அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.. ஆனால், அப்போதும் அவருக்கு போதை தெளியவில்லை.

பரபரப்பு: பிறகு, பொதுமக்களில் ஒருவர், அந்த பெண் போர்த்தியிருந்த துணியை விலக்கினார்... மதிய நேரம் என்பதால், அவரது கண்களில் வெளிச்சம் சுளீரென பட்டது. இதனால், அரைகுறை போதையில் எழுந்து உட்கார்ந்தார் அந்த பெண்.. அப்போதுதான், தன்னை சுற்றிலும் இத்தனை பேர் வேடிக்கை பார்ப்பதை அறிந்து, குழப்பத்துடனேயே தட்டுத்தடுமாறி அங்கிருந்து எழுந்து சென்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications