Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்ருங்க, கர்ப்பமா இருக்கேன்".. பதறிய தமன்னா.. ஜெயிலுக்கு போயும் திருந்தலயாமே.. "மேடம்" இப்ப கைது

கையில் வீச்சரிவாள், வாயில் சிகரெட்டுடன் வீடியோ போட்ட தமன்னாவை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கடந்த 4 நாட்களாகவே பேபி தமன்னாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தற்போது கைதாகி உள்ளார். இதையடுத்து இளம்பெண் தமன்னா என்கிற வினோதினியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோகுல்.. இவர் கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2021ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார்.. அந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிதான் இவர்.

 பழிக்குப்பழி

பழிக்குப்பழி

எனவே, பழிக்குப்பழி வாங்குவதற்காகவே, கோகுல் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.. இதையடுத்து, குரங்கு ஸ்ரீராம் நண்பர் வட்டாரத்தின் முக்கிய நபர்களை போலீசார் குறிவைத்து விசாரிக்க துவங்கினர்.. அப்படி சிக்கியவர்தான் வினோதினி.. இவருக்கு தமன்னா என்று இன்னொரு பெயரும் உண்டு. 23 வயதாகிறது.. நர்சிங் படித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய ஆண்நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. குறிப்பாக, பீளமேடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, முறைகேடாக பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்.

ரீல்ஸ்

ரீல்ஸ்

இதையடுத்து, கடந்த வருடம் இவரை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், ஜெயிலுக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் வந்த தமன்னா, திருந்தவில்லை.. மாறாக, முன்பைவிட அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்... மேலும் சோஷியல் மீடியாவில் ரவுடி குரூப்களுடன் சேர்ந்து கொண்டு, நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு, வந்துள்ளார்.. கையில் அரிவாள், வாயில் சிகரெட் என ஏராளமான வீடியோக்களை பதிவிட்டதுடன், பகையை தூண்டும் வகையில் அந்த வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தையும் உருவாக்கினார்.

 அதென்ன வாயில்

அதென்ன வாயில்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கத்தி, அரிவாள் என ஆயுதங்களுடன் தோன்றியதுடன், ஆட்சேபகரமாகவும் பேசி சிலருக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தார்.. போத்தனூரை சேர்ந்த ரவுடி "விக்கு" சண்முகம் என்பவருக்கு ஆதரவாக, தமன்னாவின் இந்த வீடியோக்கள் அமைந்திருந்ததாம்.. இதையடுத்து, தமன்னாவை பிடிக்க போலீசார் கடந்த 4 நாட்களாகவே முயற்சித்து வருகிறார்கள்.. இதற்காகவே தனிப்படையும் அமைக்கப்பட்டது... ஆனால், தமன்னா கிடைக்கவில்லை.. தலைமறைவாகவே தமன்னா இருப்பதால், அவரது நண்பர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அள்ளிவந்து விசாரிக்க ஆரம்பித்தனர்..

 ட்ரெண்டிங் சீன்

ட்ரெண்டிங் சீன்

இதனால் தமன்னா அதிர்ந்துபோனார்.. தனக்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது, போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட தமன்னா, அலறியடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டார். அந்த வீடியோவில் "நான் 2 ஆண்டிற்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வெளியிட்டு வந்தேன். அப்போது டிரண்டிங் ஆகும் ஆசையில் அந்த வீடியோக்களை பதிவிட்டேன். அதன்பிறகு கஞ்சா வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு போனேன்.. சிறையில் இருந்து திரும்பியதுமே, ஆட்சேபகரமான வீடியோக்கள் எதையும் நான் வெளியிடவில்லை.

 ஹேர்ஸ்டைல்

ஹேர்ஸ்டைல்

ஆனாலும் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொண்டு விட மறுக்கிறார்கள். நான் வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்று போலீஸ் சொல்கிறார்களாம்.. நான் முன்பு போல கிடையாது.. இப்போது நான் திருந்திவிட்டேன்.. நிறைய மாறிவிட்டேன்.. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.. இப்போது நான் 6 மாத கர்ப்பமாகவும் இருக்கிறேன்.. வீடியோ எதையும் நான் இப்போது போடவுமில்லை..

 நல்லா பாருங்களேன்

நல்லா பாருங்களேன்

நல்லா பாருங்க.. பழைய வீடியோவில் நான் முடி வெட்டியிருப்பேன்.. அதனுடன் இப்போது ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்.. திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்" என்று பேசி தன்னிலை விளக்கம் தந்திருந்தார்.. எனினும், தமன்னாவை பிடிக்க கோவை போலீசார் தீவிரமாகி கொண்டேயிருந்தனர். முதலில், திருப்பூரில் தமன்னா பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைக்கவும், திருப்பூருக்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவர் இல்லை.. பிறகு, விருதுநகரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவும், தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.. அங்கும் தமன்னா இல்லை..

 ஹேர்ஸ்டைல்

ஹேர்ஸ்டைல்

பிறகு, சங்ககிரியில் தமன்னா பதுங்கியிருப்பதாக தகவல் வரவும், அங்கு விரைந்த தனிப்படையினர், தமன்னாவை சுற்றி வளைத்தனர்.. அவரை கைது செய்ததுடன், கோவைக்கு அழைத்து வந்து, பீளமேடு ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்... அதாவது, கடந்த 2021ம் ஆண்டு போடப்பட்ட கஞ்சா வழக்கில்தான் இப்போது தமன்னா கைதாகி உள்ளார்.. இனிமேல்தான், இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது... 4 நாட்களாகவே போலீசார் எடுத்து வந்த தேடுதல் வேட்டை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.. அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் வீடியோக்களை பதிவிடுவோருக்கும், இந்த கைது நடவடிக்கை, ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+