கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் ஒரே ஆளாக வந்து செய்த சம்பவம்.. யார் அவர்? வெளியான சிசிடிவி காட்சி
கோவை: கோவை காந்திபுரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 200 பவுன் நகைகளை தனி ஒருநபராக வந்து திருடிச் சென்ற திருடனின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த காட்சியில், நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் ஒருவர் நகைக்கடையில் இருந்து நகைகளை அடித்துக் கொண்டு செல்வது தெரிகிறது.
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலை களவு போய் இருக்கிறது. 150 முதல் 200 பவுன் நகை வரை களவு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிரச்சி அடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கும் நகை கடை நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் தொடர்ந்து நகைக்கடையில் ஆய்வு செய்தனர். கடை முழுவதும் நடத்திய சோதனையில், தனியொருவராக உள்ளே வந்த நபர், ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேட்டி அளித்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், "சிசிடிவி காட்சியில் ஒருவர் மட்டுமே வந்து கொள்ளையடித்து சென்றிருப்பது பதிவாகி இருக்கிறது. இந்த நகைக்கடையில் 12 நபர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்தில் தடயங்களும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்துள்ளோம். கூடிய விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம்.
A CCTV camera visual shows a man wearing mask & gloves inside #JosAlukkas jewellery showroom in #Coimbatore in the early hours of Tuesday. The police suspect that 150 to 200 sovereigns of ornaments were stolen by the man.@thatsTamil pic.twitter.com/sClQnuwlhl
— velmurugan (@velmurugantheni) November 28, 2023
சிசிடிவி ஆய்வு செய்யும் பொழுது ஒரு நபர் தான் சம்பவத்தில் ஈடுபட்டது போல் தென்படுகிறார். கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். சுமார் 150 லிருந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
சம்பவத்தில் ஈடப்பட்டவர் உள்ளே சென்ற பொழுது முகத்தை மறைத்திருக்கிறார. முகமூடி எதுவும் போடவில்லை. நாங்கள் ஆய்வு செய்த போது, அவர் ஏசி வென்டிலேட்டர் வழியாக சென்றது தெரியவந்தது. இந்த கடையில் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. எனவே அந்த பணிகளை மேற்கொண்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம், அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் ஒருவர் சர்வ சாதாரணமாக வந்து நகைகளை கொள்ளை அடித்தபடி செல்கிறார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications