இதான் சரியான நேரம்! உள்ளே புகுந்து கோட்டையை "கலைக்கும்" ஸ்டாலின்! தேதி குறிச்சாச்சு! அதிரும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தென் மண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தென் மண்டலத்தில் இருக்கும் முக்குலத்தோரை தன் பக்கம் இழுக்க அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த பயணம் மூலம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் முக்குலத்தோர் நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆபரேஷன் சவுத் பயணத்தை ஆர்பி உதயகுமார்தான் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி இப்படி தெற்கிற்கு செல்லும் நிலையில் அவருக்கு போட்டியாக சேலத்து நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் முயன்று கொண்டு இருக்கிறார்.

சேலத்தில் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தன்னுடைய பக்கத்திற்கு கொண்டு வர ஓ பன்னீர்செல்வம் ஆலோசனைகளை செய்து வருகிறார்.

சண்டை

சண்டை

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்.. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருங்க.. நான் உங்க "கோட்டையை" கலைகிறேன் என்று களமிறங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆம் அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், பாஜகவை சேர்ந்த சிலர் என்று பல மாற்று கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக திமுக பக்கம் செல்ல உள்ளனர். செந்தில் பாலாஜியின் முன்னெடுப்பின் மூலம் கோவை மற்றும் மற்ற கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் திமுக பக்கம் செல்ல இருக்கிறார்களாம்.

எப்போது

எப்போது

இதற்கான தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் கோவைக்கு செல்ல இருக்கிறார். 23ம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு செல்ல இருக்கிறார். மறுநாள் காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துகடவிற்கு செல்கிறார். அன்று மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்க முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

அதன்பின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். கோவையில் அரசியல் நிலவரம், லோக்சபா தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். அதே நாள் மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் திமுகவில் கலந்து கொள்ளும் பெரிய மாநாடு நடந்து வருகிறது. இதற்காக பெரிய மாநாடு நடத்தப்பட உள்ளது.

Recommended Video

    பிரதமர் மோடிக்கு நன்றி.. அன்பிட் அமைச்சர்! திடிரென அன்பில் மகேஷை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜு!
    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    இந்த கூட்டத்திற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக கொங்கு மண்டல நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய உள்ளனர். எடப்பாடி எழுச்சியால் ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் பலர் இப்படி திமுகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே கொங்கில் சிறப்பாக செயலாற்றிய திமுக தற்போது லோக்சபா தேர்தலுக்கு குறி வைத்து ஆட்களை சேர்க்க தொடங்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+