இந்திய அரசியலில் எந்த தலைவரும் செய்யாதது.. ரிசல்ட் நாளில் அண்ணாமலை இப்படி செய்யலாமா? ஒரே குழப்பம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தொகுதியில் தனது பிறந்த நாளுக்கு திமுகவிற்கு வெற்றியை ட்ரீட்டாக கொடுத்து இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் எந்த தலைவரும் செய்யாத ஒரு விஷயத்தை அண்ணாமலை செய்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை.

Lok Sabha Election 2024 annamalai 2024 coimbatore

அண்ணாமலை தமிழ்நாட்டை தாண்டி தனக்கு என்று உருவாக்கிய பிம்பம் பல்வால் தேவனுக்கு பின் இருக்கும் பாகுபலி சிலை போன்றது. தேசிய அளவில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்துவிட்டேன் என்று அண்ணாமலை சென்ற இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அண்ணாமலை நம்பிக்கை: தமிழ்நாட்டில் பாஜக 25 சதவிகித வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை.

நான் பேசுவது ரெக்கார்ட் ஆகும். நான் போகிற போக்கில் சொல்ல முடியாது. சொல்ல கூடாது. நாங்கள் 25 சதவிகிதம் வாக்குகள் எடுப்போம். 500 சதவிகித வளர்ச்சி. நான் சொல்வதை நீங்கள் தேர்தலுக்கு பிறகு உணர்வீர்கள் , என்றெல்லாம் அண்ணாமலை பேசி இருந்தார்.

இதை எல்லாம் பார்த்த பாஜகவின் தீவிர வடக்கு பக்தர்கள்.. கண்டிப்பாக தமிழ்நாட்டில் புரட்சி இருக்கு பாஸ். இப்போ மோடி.. அடுத்து யோகி.. அதற்கு அடுத்து அண்ணாமலைதான் என்றெல்லாம் பேசி இருந்தனர். ஆனால் அண்ணாமலை ஏற்கனவே சட்டசபை தேர்தலில் தோற்றவர் என்பதை எல்லாம் வசதியாக மறந்தும் விட்டனர்.

அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக பெரிதாக பூத் கமிட்டியை கூட அமைக்கவில்லை பாஜக என்பதை எல்லாம் உணராமல் அண்ணாமலை பேட்டியில் சொன்ன விஷயங்கள் உண்மையாக நடக்கும் என்று நம்பினர். ஆனால் உண்மையான தமிழ்நாட்டின் களநிலவரம் வெளியே உள்ளவர்களுக்கு தெரியவில்லை.

பாஜகவின் மதிப்பு: தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மையான நிலை என்ன? அண்ணாமலைக்கு இருக்கும் இமேஜ் என்ன என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை. இப்போது தேர்தல் ரிசல்ட் நாளில் திடீரென அண்ணாமலை தோல்வி அடைந்ததை பார்த்து வடநாட்டு பாஜகவினர்.. அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுதான் நிஜ நிலவரமா.. நோ.. நெவர் என்று செய்வதறியாமல்.. திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாமலை தோல்வி; கோவை தொகுதியில் தனது பிறந்த நாளுக்கு திமுகவிற்கு வெற்றியை ட்ரீட்டாக கொடுத்து இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.

அண்ணாமலை தோல்வி முகம்; கோவையிலும் பாஜக தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 498837 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 395559 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 204096 வாக்குகள் பெற்றுள்ளார்.

செய்யாத காரியம்: இப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் எந்த தலைவரும் செய்யாத ஒரு விஷயத்தை அண்ணாமலை செய்துள்ளார். அதன்படி வாக்கு எண்ணும் மையத்தை அண்ணாமலை ஒருமுறை கூட எட்டிப் பார்க்கவில்லை. பொதுவாக பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பதவியில் இருப்பவர்களை தவிர மற்ற எல்லோரும் தங்கள் தொகுதிக்கு வாக்கு எண்ணும் போது போது மையத்திற்கு செல்வது வழக்கம்.

ஆனால் அண்ணாமலை கோவை கோவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லவில்லை. பிரதான வேட்பாளர்களான திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று இருந்தனர்.

ஆனால்,12 மணி நேரமாகியும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லவில்லை. அதோடு வெளியே மீடியாவை பார்க்கவும் வரவில்லை. அடிக்கடி மீடியாவில் பேசும் அண்ணாமலை இன்று மீடியாவையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+