ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்? சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!
திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video

கோயம்புத்தூர்: திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் ஒரு நடிகனை பார்த்து பயப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வைத்தார்.

கமல்
கமல்ஹாசன் தனது பேச்சில், சில அரசியல் தலைவர்கள் என்னை பார்த்து, நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கேட்கிறார்கள். ஆம் நான் நடிகன் தான். நான் நல்ல நடிகன். நான் வரி கட்டும் நடிகன். நான் நேர்மையான நடிகன். நீங்கள் எல்லாம் நடிகரிடம் தோல்வி அடைந்ததால் பயப்படுகிறீர்கள். ஒரு நடிகர்தான் உங்களை ஆட்சிக்கு வர விடாமல் வனவாசம் அனுப்பியது.

ஏன் நடிகன்
அதனால்தான் நீங்கள் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள். எங்கே இன்னொரு நடிகன் அரசியலுக்கு வருவானோ என்று பயன்படுகிறீர்கள். சட்டசபையை நீங்கள்தானே சட்டை சபையாக மாற்றி வைத்துள்ளீர்கள். நான் அதை மாற்றுவேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.

பொள்ளாச்சி சம்பவம்
பொள்ளாச்சி சம்பவத்தை எப்படி இவ்வளவு அலட்சியமாக பார்க்க முடிகிறது.எஸ்.பி வாய் தவறி பெண்ணின் பெயரை சொல்கிறார். இணையத்தில் வீடியோ வெளியாகிறது. ஆனால் முதல்வர் ஒன்றுமே பேசவில்லை. குற்றவாளிதான் அமைதியாக இருப்பார்

திருடனுக்கு தேள்
திருடனுக்கு தேள் கொட்டியது போல அரசு அமைதியாக இருப்பது ஏன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினா, அழகிரியா என்ற கேள்விக்காக தினகரன் அலுவலகத்தை திமுகவினர் கொளுத்தினார்கள். தொழிலாளிகள் பலியானார்கள், ஆனால் முதலாளிகள் மீண்டும் கூட்டு சேர்ந்தார்கள்.

கிண்டல்
அரசை கிண்டல் செய்துவிட்டு இப்போது மாம்பழத்தை எடுத்து சிலர் கொடுத்து கூட்டணி வைத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு இது பாதுகாப்பான அரசு என்று அவர்களே பிரச்சாரம் செய்கிறார்கள், இவர்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா, என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications