அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு.. வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல்? தேர்தல் ஆணைய விதி என்ன?
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஒரு தொகுதியின் எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி இருக்கும் சூழலில், இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை விடவும் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் கந்தசாமி வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் முதலாவதாக வெற்றியை உறுதி செய்தவர்.

அமுல் கந்தசாமி மறைவு
சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அமுல் கந்தசாமி, ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் இருந்திருக்கிறார். கடந்த முறை முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வால்பாறை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வென்றார்.
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல்?
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அமுல் கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென காலமானார். இவரது மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் விதிகள் என்ன?
ஏனென்றால் சட்டப்படி சட்டசபை அல்லது நாடாளுமன்ற தொகுதிகள் காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு தொகுதியின் பிரதிநிதி உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, அடுத்த 6 மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஏனென்றால் தொகுதி மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக தான்.
சட்டமன்றத் தேர்தல்
இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் தான்.
அதிமுக நிலைப்பாடு
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த 2 இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. திமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு 4 மாதமே இருப்பதால், எந்த கட்சியும் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications