விடுதலை விடுதலை.. தமிழக மீனவர்களுக்கு குட்நியூஸ்.. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்ற இலங்கை அதிபர்!
டாக்கா: பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தாய்லாந்தில் நடந்த BIMSTIC மாநாட்டை முடித்து கொண்டு நேராக இலங்கை சென்றார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இறங்கிய பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், இருநாடுகள் இடையேயான 7 முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு துறை, எரிசக்தி, டிஜிட்டல் துறை, சுகாதாரம் மற்றும் வணிக துறை சார்ந்து 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் என்பது தமிழகத்தை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நம் மாநில மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்கின்றனர். அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றன. இதனால் மீனவர்களின் பிரச்சனைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீண்டும் இந்தியா கைப்பற்ற வேண்டும். பிரதமர் மோடி அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி இன்றைய தினம் பிரதமர் மோடி - இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஆகியோர் இடையே மீனவர்கள் பிரச்சனை பற்றி விரிவாக பேசப்பட்டது. இந்த வேளையில் பிரதமர் மோடி, ‛‛தமிழ்நாடு உள்பட இந்திய மீனவர்கள் பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் இலங்கை செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் இலங்கையின் செயல்பாடு சரியாக இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்கே ஒப்புக்கொண்டார். இந்திய மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிப்பதாக அவர் உறுதியளித்தார். இது தமிழக மீனவர்களுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இலங்கையின் பிடியில் நம் மீனவர்களும், படகுகள் உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை பிரதமர் மோடியும் உறுதி செய்துள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி, ‛‛மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி விவாதித்தோம். இந்த விவகாரத்தை இருதரப்பும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். மீனவர்களின் விடுதலை மற்றும் படகுகளை விடுவிக்க பற்றி விவாதிக்கப்பட்டது'' என்று கூறியிருந்தார்.
மேலும் பிரதமர் மோடி இலங்கைக்கு முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், ‛‛இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. நாங்கள் இலங்கையின் பக்கம் நிற்கிறோம். கொரோனா பரவல், பயங்கரவாத தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றில் இலங்கைக்கு ஆதரவாக இருந்தோம். இன்னும் தொடர்ந்து இருப்போம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications