Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடங்குளத்தை கண்காணிக்கும் சீனா.. களமிறக்கப்பட்ட ராட்சச ரேடார்? தென் இலங்கையில் என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையங்களாக கருதப்படுகின்ற கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை தெற்கு இலங்கையில் ரேடார் அமைப்பை நிறுவி, அதன் மூலம் சீனாவால் கண்காணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு பக்கம் பாகிஸ்தான் அச்சுறுத்தல், மறுபக்கம் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மையங்கள் எல்லாம் அந்த காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் தான் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு, பாகிஸ்தான், சீனாவில் இருந்து மிக நீண்ட தொலைவில் இருந்தது. பாதுகாப்பான பகுதியும் கூட. இது ஒருபுறம் எனில் பல வருடங்களாக இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காரணத்தால், சீனாவில் அங்கு கால் ஊன்ற முடியவில்லை.

Is China setting up a radar in Sri Lanka to monitor India?

இப்போது அப்படி இல்லை, உள்நாட்டு போரில் இருந்து மீண்ட இலங்கை, தற்போது மிகப்பெரிய அளவில் கடன் நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த கடன் நெருக்கடியை சாதகமாக்கி கொண்ட சீனா, இலங்கையால் கடனை மீள செலுத்தும் வழி இல்லாத காரணத்தால், 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டது. இதேபோல் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தையும் சீனா செயல்படுத்தி வருகிறது.இ

யாழ்ப்பாணதை மையமாக கொண்டு நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றில் மின்சக்தி கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன நிறுவனமான சினோ சோ ஹைப்ரிட் டெக்னாலஜி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது சீனா பல்வேறு வளர்ச்சி பணிகளை தனது சொந்த செலவில் இலங்கையில் செய்து வருகிறது. இதன் மூலம் வருமானமும் பார்த்து வருகிறது.அளவுக்கு மீறி கடன் கொடுத்து, கடனை கட்ட முடியாதவர்களாக மாற்றி, அவர்களின் வளங்களை மொத்தமாக பயன்படுத்துவதுதான் சீனாவின் திட்டம். அதை சீனா இலங்கையில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

Is China setting up a radar in Sri Lanka to monitor India?

சீனா இலங்கையின் செய்து வரும் உள்கட்டமைப்புகள் வெறும் பொருளாதார வளத்தை பெறுக்குவதற்காக மட்டுமல்ல, இந்தியாவை கண்காணிக்கவும் , அச்சுறுத்த பயன்படுத்தக்கூடும் என்பதால், இந்தியா ஆரம்பம் முதலே இலங்கையை எச்சரித்து வருகிறது. சீனாவின் பல்வேறுதிட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரேடார் மூலம் தென்னிந்தியாவில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு மையங்களை கண்காணிக்க முடியுமாம். மேலும் இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையங்களாக கருதப்படும் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களையும் சீனாவா கண்காணிக்க முடியுமாம். மேலும் அவற்றிற்கான எரிபொருள் விநியோகத்தையும் இந்த ரேடார் முகாமின் மூலமாக சீனாவால் கண்காணிக்க முடியும் என்றும் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன.

Is China setting up a radar in Sri Lanka to monitor India?

சீனாவின் இந்த கண்காணிப்பு திட்டம் என்பது இந்திய பெருங்கடல் முழுவதும் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை நோக்கி பயணிக்கும் இந்திய கடற்படையின் படகுகளின் பயண நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இலங்கையில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+