109 பலாத்கார கேஸ், இந்தியா எதிர்ப்பாளர், ரஜினிகாந்த் ரசிகர்-இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே. இந்தியாவை கடுமையாக எதிர்த்து கொழும்பில் போராட்டங்களை நடத்தியவர் நாமல். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் 109 பெண்களை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர் இந்த நாமல் ராஜபக்சே.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

109 பலாத்கார புகார்களில் கைது: மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜ்பக்சே பதவி காலங்களில் ராஜபக்சேக்களின் மகன்கள் ஆடிய ஆட்டங்களை சிங்கள மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்தே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக நாமல் ராஜபக்சே மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் 2016-ம் ஆண்டு நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா எதிர்ப்பு போராட்டம்: இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான நாமல் ராஜபக்சே, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை 2017-ம் ஆண்டு நடத்தினார். இலங்கையில் உள்ள மாத்தளை ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. சீனா நிதியுதவியுடன் ராஜபக்சே ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முடிவு செய்ததால் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாமல் ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் ஹம்பாந்தோட்டை இந்திய துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
விரட்டியடித்த அமெரிக்கா: 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலை பார்ப்பதற்காக நமல் ராஜபக்சே மாஸ்கோ சென்றிருந்தார். மாஸ்கோவில் இருந்து நமல் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். ஆனால் அப்போது அமெரிக்காவுக்குள் நாமல் ராஜபக்சே நுழையவே கூடாது என அதிரடி தடை விதிக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ஓவராக புலம்பியிருந்தார் நாமல் ராஜபக்சே.
ரஜினிகாந்த் ரசிகர்- ஆதரவு: கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக பேசுபொருள் இருந்தது. அப்போது ரஜினிகாந்த் இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும் அந்த நாடு தடை விதித்ததாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது நாமல் ராஜபக்சே தமது எக்ஸ் பக்கத்தில் தமிழில், "நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என கூறியிருந்தார்.
மோடி நிகழ்ச்சியில் நாமல் ராஜபக்சே: இந்தியாவுக்கு எதிராக போராடியவர்; இலங்கையில் சீனாவின் ஆதரவு முகமாக அறியப்படுகிற "ராஜபக்சே" குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் நாமல் ராஜபக்சே. ஆனாலும் 2021-ம் ஆண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவில் இலங்கையை சேர்ந்த புத்த துறவிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் நாமல் ராஜபக்சேவும் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை பரிசாகக் கொடுத்தார் நாமல் ராஜபக்சே. நாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அப்போது கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications