மாளிகைக்கு வந்தது வந்துட்டோம்.. "அங்க" உட்கார்ந்துட்டு போவோம்.. ஒரு செகன்ட் "அதிபர்களான" குடிமக்கள்!
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிக்கையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவரது இருக்கையிலும் ஒவ்வொருவராக அமர்ந்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்ற மகிந்த ராஜபக்சவை மக்கள் விரட்டியடித்தனர்.

மகிந்த ராஜபக்ச
உயிரை கையில் பிடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்ச தப்பியோடினார். தமிழ் மக்களின் பாவம் சும்மா விடுமா என்ன. இதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல சில முயற்சிகளை எடுத்தார். எனினும் பெரிய அளவில் அதற்கு பலன் ஏதும் இல்லை.

பசி பட்டினி
இதனால் மின்வெட்டு, பசி, பட்டினி, உள்ளிட்ட சூழல்களை பல்லைக் கடித்துக் கொண்டு பொருத்திருந்த மக்கள் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் தனது சகோதரனை போல அவரும் மறுத்தார். இந்த நிலையில்தான் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நேற்று சென்றனர்.

முற்றுகை
அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய நிலையிலும் எப்படியோ அதிபர் மாளிகையின் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு சென்று கோத்தபய ராஜபக்சவை தேடினார்கள். இந்த நிலையில் அதிபரின் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரே அக்கப்போராக இருந்தது.

அதிபர் இருக்கை
அது போல் அதிபர் மாளிகையில் இருந்த உணவை சுவைத்தனர். அங்கு ஒரு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்தனர். பின்னர் நீச்சல் குளத்தில் இறங்கி குளியல் போட்டனர். ஒரு சிலர் ஜனாதிபதியின் குளியல் அறையையும் பயன்படுத்திய காட்சிகள் வைரலானது. இந்த நிலையில் அதிபரின் இருக்கையில் ஒவ்வொருவராக அமர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. வந்தது வந்துட்டோம் அதிபர் சீட்டில் அமர்ந்து செல்பி எடுக்காட்டி எப்படி?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications