ரணில் வந்தா மட்டும் விடுவோமா? கோத்தபய ராஜபக்சேவை நெருக்கும் இலங்கை மக்கள்.. தொடரும் போராட்டம்
கொழும்பு: இலங்கையில் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அங்கு மக்கள் தொடர்ந்து அதிபர் அலுவலகத்தில் எதிராக போராடி வருகின்றனர்.
இலங்கையில் நிலவி வந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை
இந்த நிலையில் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். பிரதமர் ரணில் ராஜபக்சே குடும்ப நண்பர். அவர்களை அரசியல் ரீதியாக காப்பாற்றவே ரணிலை பிரதமராக்கி உள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் மாறப்போவது இல்லை என்று கூறி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

போராட்டம்
மேலும், எங்கள் போராட்டம் மேலும் அதிகரிக்கும். அரசியல் ரீதியாக மொத்தமாக இலங்கை ஆட்சி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். அதேபோல் பொருளாதார கொள்கைகளில் உடனே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் போராடுவோம். வெறுமனே பிரதமரை மாற்றுவதால் எங்களின் போராட்டம் நிற்காது என்று இலங்கை பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் முடிவு
பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. இன்னொரு பக்கம் மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவாக இருப்போம் என்று எதிர்கட்சிகள் அங்கு தெரிவித்துள்ளன. ரணிலை பிரதமராக்கியதை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் பிரதமர் ரணில் மே 17ம் தேதி பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஆதரவு
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்பிக்களில் 160 எம்பிக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே மூன்று எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு தர முடியாது. அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறிவிட்டன. முக்கிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான ஹர்ஷா நேற்று ரணிலுக்கு ஆதரவு தர மாட்டேன் என்று அறிவித்தார். தனக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும், பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video

மக்கள் முடிவு
தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட மற்ற கூட்டணிகளும் ரணிலுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. ரணிலும், மகிந்தவும் பிரதமராக இருப்பது என்பது ஒன்றுதான். இதில் வேறுபாடு கிடையாது. இரண்டு பேருமே பெரிதாக மாற்றங்கள் எதையும் செய்து விட போவதில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும். அப்போதுதான் போராட்டம் முடியும் என்று கூறி மக்கள் தொடர்ந்து அதிபர் அலுவலகத்தில் எதிராக போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications