இலங்கை அரசை கலைக்க வேண்டும்.. சிறிசேனா பதவி விலக வேண்டும்.. ராஜபக்சே கோரிக்கை!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலக வேண்டும், அரசை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலக வேண்டும், அரசை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று அவசரமாக அங்கு நாடாளுமன்றம் கூடியது. இதில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

என்ன சொன்னார்
மகிந்த ராஜபக்சே தனது பேச்சில், இந்த தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல். இலங்கையை இந்த தாக்குதல் உலுக்கி உள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

என்ன தாக்குதல்
இப்படி ஒரு தாக்குதல் நடக்க போகிறது என்று அரசுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால் அரசு மக்களை காக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேண்டும் என்றே இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்துள்ளது.

முன்னாள் அதிபர்
நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவும் நினைக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற முறையில் கேட்கிறேன். இதை எப்படி நடக்க விட்டார்கள். ஏன் அரசு இவ்வளவு மெத்தனமாக நடந்து கொண்டது.

அரசு விலகல்
தன் சொந்த மக்களை காப்பாற்ற இயலாத அரசு இருந்தும் என்ன பயன்?. இந்த அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும், என்று ராஜபக்சே கோரிக்கை வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications