பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்
இலங்கை குண்டுவெடிப்பில், தீவிரவாதி என்று கருதப்படும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில், தீவிரவாதி என்று கருதப்படும் நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஈஸ்டர் அன்று காலை 9 மணி அளவில் இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இதுகுறித்து வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பொறுப்பு
இந்த நிலையில் இலங்கை தாக்குதலுக்கு தற்போது ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

இப்போதுதான்
கடந்த சில நாட்களாக இலங்கை தாக்குதல் நடத்தியது யார் என்று குழப்பம் நிலவி வந்தது. ஆனால் 48 மணி நேரமாக யாரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது.
|
என்ன வீடியோ
இந்த தாக்குதல் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச்சில் நடந்த தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் தீவிரவாதி என்று கருதப்படும் நபர் பெரிய பேக்குடன் தேவாலயத்திற்கு வருவது பதிவாகி உள்ளது.

விசாரணை
முதுகில் இவர் மிகப்பெரிய பையை மாட்டி இருக்கிறார். இதில்தான் வெடிகுண்டு இருந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இவரும் இறந்திருக்க வாய்ப்புள்ளதால், இவரின் உடலை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications