கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது நரகம்.. "அந்த" இடத்திலேயே தஞ்சம் அடைந்த ராஜபக்சே.. ஐநாவையே அலற வைத்த இடம்.. இதான் கர்மா!

Google Oneindia Tamil News

கொழும்பு: மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் திருகோணமலையில் கடற்படை தளம் என்பது பல கருப்பு பக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் ரத்தம் படிந்த தளம் ஆகும்.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடக்கும் நாடு தழுவிய போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் அதிபர், பிரதமர் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.

    பாகுபலி பட வில்லன் பல்வால்தேவன் சிலை போல ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள் பாகுபலி பட வில்லன் பல்வால்தேவன் சிலை போல ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்

     மகிந்த ராஜபக்சே

    மகிந்த ராஜபக்சே

    இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முதல் நாள் மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு கொளுத்தப்பட்டது. இதனால் நேற்று கடும் ராணுவ பாதுகாப்போடு மஹிந்த ராஜபக்சே அதிகாலையில் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார். இதுதான் பிரதமர் இருக்கும் மாளிகை ஆகும். இங்கிருந்து வெளியேறிய பின் மகிந்த ராஜபக்சே எங்கே தங்க போகிறார் என்ற கேள்வி நிலவியது. அவர் சொந்த பூர்வீக வீடு எரியூட்டப்பட்டுவிட்டது. அவரின் மற்ற வீடுகளில் தங்குவது பாதுகாப்பு இல்லை.

    எங்கே தங்குவார்?

    எங்கே தங்குவார்?

    இதனால் அவர் எங்கே தங்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் மகிந்த ராஜபக்சே திருகோணமலையில் இருக்கும் அந்நாட்டு கடற்படையின் தளத்தில் தங்க போவதாக செய்திகள் வந்தன. மகிந்த ராஜபக்சே மற்றும் அவரின் குடும்பத்தினர் சிலர் இங்கே இடமாறிவிட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இந்த செய்திகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரச்சனை வந்தால் மகிந்த ராஜபக்சே இங்கிருந்து கப்பலில் தப்பித்து செல்வார் என்றும் செய்திகள் வருகின்றன.

    திருகோணமலை

    திருகோணமலை

    திருகோணமலையில் கடற்படை தளம் என்பது பல கருப்பு பக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் ரத்தம் படிந்த தளம் ஆகும். வடகிழக்கு பகுதியில் இலங்கையில் இந்த திருகோணமலை கடற்படை தளம் அமைந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் 2007-2009 வரை இங்கு வதை முகாம்கள் இருந்ததாக புகார் உள்ளது. அதாவது கைது செய்யப்பட்ட தமிழர்களை இங்கு வைத்து ராஜபக்சேவின் ராணுவம் டார்ச்சர் செய்ததாக புகார் உள்ளது.

    சீக்ரெட்

    சீக்ரெட்

    இங்கு சீக்ரெட்டாக இடம் ஒன்றை வைத்து அங்கு ராணுவம் தமிழர்களை கொடுமைப்படுத்தியதாக புகார்கள் உள்ளன. இந்த புகார்களை தொடர்ந்து ஐநாவே அலறியடித்துக்கொண்டு இங்கு ஐநாவே வந்து சோதனை செய்தது. அங்கு செய்யப்பட்ட சோதனையில், ரகசியமான ஒரு டார்ச்சர் சென்டர் இருந்ததாக ஐநா தெரிவித்தது. இது பற்றி தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று அப்போதே ஐநா இலங்கைக்கு உத்தரவிட்டது.

    கமிட்டி

    கமிட்டி

    3 பேர் கமிட்டி இங்கு 2009க்கு பின் சோதனைகளை செய்து இந்த சீக்ரெட் டார்ச்சர் தளம் இருப்பதை கண்டுபிடித்தது. ராணுவத்திடம் 2009ல் சரண் அடைந்த பலர் மாயம் அடைந்தனர். அவர்களை இங்கே வைத்து இலங்கை ராணுவம் கொடுமைபடுத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்தே ஐநா இங்கு சோதனை செய்தது. சோதனையில் இங்கு 12 மோசமான ஜெயில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவற்றில் ரத்தம், மற்றும் கொடுமைபடுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    டார்ச்சர் தளம்

    டார்ச்சர் தளம்

    அதேபோல் திருகோணமலையில் கடற்படை தளத்தில் இருந்தது போன்ற மேலும் பல டார்ச்சர் தளங்கள் மற்ற கடற்படை தளத்திலும் இருக்கும் என்று ஐநா சந்தேகம் தெரிவித்தது. அங்கு நடைபெற்ற போர் குற்றங்களுக்கு சாட்சியாக இந்த பகுதி இருந்தது. தமிழர்கள் அலறிய அதே பகுதியில் தற்போது சிங்களர்களுக்கு அஞ்சி மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நாம் விதைத்த வினை நமக்கே திரும்பி வருவதை கர்மா என்பார்கள். கர்மாவிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.. அது மகிந்த ராஜபக்சேவாக இருந்தாலும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தி உள்ளது.

    English summary
    Why did Mahinda Rajapaksa allegedly move to the Trincomalee navy base? The Dark history of the place. மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் திருகோணமலையில் கடற்படை தளம் என்பது பல கருப்பு பக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் ரத்தம் படிந்த தளம் ஆகும்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X