ரெய்டின் 2வது நாள்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15.64 கோடி மதிப்பு ஆவணங்கள் பறிமுதல்
கடலூர்: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது கணவர் பன்னீர்செல்வம் கடந்த 2011 - 16 இடைப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்தில் பண்ருட்டி நகராட்சித் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கடந்த 27 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் பன்னீர்செல்வத்துக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு, சென்னை பெரம்பூர் ஜவஹர் நகர் தியாகராஜன் வீதியில் இருக்கும் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் வீடு, இவர்களின் பினாமியாக கூறப்படும் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த மோகன்பாபு, பண்ருட்டி கந்தன்பாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள், பண்ருட்டி திருவதிகை கடலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரசன்னா, பண்ருட்டி இந்திரகாந்தி சாலை பகுதியில் வசிக்கும் செந்தில் முருகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை தொடங்கியது.
கடலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையில் 6 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது. நேற்று பல மணி நேர சோதனையில் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள், நிலம் மற்றும் மனை சொத்து ஆவணங்கள் என ரூ.15.64 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்து சிதம்பரம் எம்எல்ஏவும் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாண்டியன், புவனகிரி எம்எல்ஏவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் நடத்தப்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்றும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications