பாமக பந்த்.. கடலூரில் வழக்கம் போல இயங்கும் அரசு பேருந்துகள்.. தெருவிற்கு தெரு தீவிர பாதுகாப்பு
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்க இருந்த நிலையில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களை என்எல்சி கைப்பற்றுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பாமக சார்பாக இன்று பந்த் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதுவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. இந்த போராட்டம் காரணமாக ஈரோடு கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பேருந்துகள் இயக்கம்
கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்க இருந்த நிலையில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பேருந்துகள் எப்போதும் போல இயங்கும். பாமக பந்த்திற்கு இடையே கடலூரில் 100% அரசு பேருந்துகள் இயக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் பேருந்துகள் 50% இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வாகனங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
அதே சமயம் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழிப்பாதை மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் இருந்து ஒரு சில பேருந்துகள் கடலூருக்கு இன்று வருகின்றன.கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் போலீசார் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். பா.ம.கவினர் 55 பேரை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தது தமிழ்நாடு போலீஸ். அதே போல இந்த போராட்டம் காரணமாக கலவரம், மோதல் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முழு அடைப்பு
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. கடலூரில் மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை என்எல்சி நிறுவனம் சமன் செய்வதாக பாமக குற்றச்சாட்டு வைத்து உள்ளது. இதில் என்எல்சி, அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து கடலூர், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாமக கட்சி அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு, காவல்துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அது கண்டிக்கத்தக்கது.

அறிக்கை
கடலூர் மாவட்டத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் முகவராக தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகின்றன. மக்களைக் காப்பது தான் அரசின் முதற்கடமை என்பதை மறந்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தின் கையசைவுக்கு ஏற்றவாறு தமிழக அரசு செயல்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக கண்டித்து வருகிறது. இப்போது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக அடுத்தக்கட்ட அடக்குமுறையையும், வன்முறையையும் காவல்துறை உதவியுடன் தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது., என்று பாமக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications