என்ன நடந்தது சிதம்பரத்தில்?.. சிபிஆர் ரிப்பேரா? திணறி திணறி நோயாளி உயிரிழந்த பரிதாபம்.. ஷாக் வீடியோ
கொரோனா நோயாளி மரணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது
கடலூர்: சிதம்பரம் பகுதியில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் அலட்சியம் காரணமாக கொரோனா நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிதம்பரத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்.. இவர் மனைவி பெயர் செந்தாமரை.. இவர்கள் 2 பேருக்குமே கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், தம்பதி இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.. ஆனால், இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ம் தேதி கோதண்டராமன் உயிரிழந்துவிட்டார்.. அதன்பிறகு செந்தாமரைச்செல்வி மட்டும் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

குற்றச்சாட்டு
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பிறகு மூச்சு நின்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.. அந்த மருத்துவமனையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த சிபிஆர் இயந்திரம் இயங்காததே செந்தாமரையின் மரணத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

இயந்திரம்
இதுகுறித்து இந்த தம்பதிகளின் மகன் சீனிவாசன், தானே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில், சம்பவ தினத்தன்று, டியூட்டி டாக்டரை அழைத்து வர, சென்றோம்.. ஆனால், டாக்டர் அங்கு இல்லை என்பதால் காலதாமதம் ஆகிவிட்டது.. அதற்குள் சிபிஆர் இயந்திரமும் ரிப்பேர் ஆகிவிட்டது.. அந்த மிஷினை மாற்றுவதற்குகூட டாக்டர்கள் இல்லை..

உரிய சிகிச்சை
உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும் டாக்டர்கள் டியூட்டியில் இல்லை.. அதனால்தான் என் அம்மாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிரிழக்க நேரிட்டது" என்று தெரிவித்திருந்தார்.. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடவும், பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

கலெக்டர்
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தபோது, இந்த வீடியோ தொடர்பாகவும், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் உண்மை வெளிவரும், அதன்படி யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக புகார் எதுவும் போலீசில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications