கடலூருக்குள் ஜிபிஎஸ் கருவியுடன் வந்த கழுகு.. மர உச்சியில் "பாறு" காலில் பிளாஸ்டிக்? வியந்த பண்ருட்டி
கடலூர்: பண்ருட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட நிலையில், பறந்து வந்த கழுகால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமரா எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ளது சித்திரைச்சாவடி என்ற பகுதி.. இந்த கிராமத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு கழுகு ஒன்று பறந்து வந்துள்ளது.. அந்த பகுதியிலுள்ள வீட்டின் அருகே உட்கார்ந்திருந்தது..

கடலூரில்: பிறகு, அந்த பகுதியில் இருந்த காமன் கோயில் மீதும் ஏறி உட்கார்ந்தது. அந்த கழுகின் காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டைகள், முதுகில் ஜிபிஎஸ் போன்ற கருவி பொருத்தப்பட்டிருந்தது.
இதைப்பார்த்ததுமே கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. எனவே, அப்பகுதி இளைஞர்கள், அக்கழுகை பிடிக்க முயன்றார்கள்.. ஆனால், கழுகு ஒரு இடத்தில் நில்லாமல், மாறி மாறி உட்கார்ந்தது.. இதனால், கழுகை பிடிக்க முடியவில்லை.. இந்த தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. அப்போதும் கழுகு அதே மரத்தின் கிளையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்தது. ஆனால், அங்கேயே தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருந்தது..
காட்டுத்தீ: பிறகு வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையில் யாரும் வராத நிலையில் கழுகு மதியம், 2:00 மணிக்கு அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. இந்த செய்தி காட்டு தீப்போல கிராமத்துக்குள் பரவியதுமே, ஏராளமானோர் கழுகை பார்ப்பதற்காக கிராமத்திற்கு திரண்டு வந்தனர். இது, அரிய வகையான, "பாறு" என்ற இனத்தை சேர்ந்த கழுவாகும்..
கழுகின் முதுகு பகுதியிலும், முன் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா ஏன் பொருத்தப்பட்டிருந்தது என்று தெரியவில்லை.. வனத்துறை விளக்கம் அளித்தால் மட்டுமே, இதற்கான விடை தெரியும்.
வீடியோக்கள்: அதேசமயம், கழுகு எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார்கள்? அந்த கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். எனினும் கிராமத்துக்குள் வந்த இந்த கழுகின் போட்டோ, வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாவில் பரவி பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பாறு" கழுகுகளை பாதுகாக்கும் அம்சமாக கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறையின் அனுமதி கிடைத்தவுடன், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கழுகுகளை பிடித்து ஜி.பி.எஸ். கருவி பொருத்தி வனப்பகுதியில் விடப்படும் என்றும், அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து அதன் வாழ்விட சூழலை அறிய உள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது,
பரபரப்பு: பாறு கழுகுகள் பாதுகாப்புக்கு செயல்திட்டம் வகுப்பதற்கு வரைவு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென பாறு கழுகு பண்ருட்டிக்குள் நுழைந்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications